தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பினார் விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு.!!

சென்னை

அ.தி.மு.க. கழக ஒருங்கிணைப்பாளரும் தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை பெற அமெரிக்காவில் சிகாகோ ஹூஸ்டன், வாஷிங்டன் டி.சி,மற்றும் நியுயார்க் உள்ளிட்ட நகரங்களுக்கு அரசுமுறைப் பயணமாக சுற்றுபயணம் மேற்க்கொண்டு நேற்று தமிழகம் திரும்பினார் அவரை சென்னை விமான நிலையத்தில் வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதில் அதிமுக கழக அவைத்தலைவர் இ.மதுசூதனன், மாவட்டச் செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ் ஆகியோர் மலர் கொத்துகளை வழங்கி வரவேற்றனர். துணை முதல்வர் வரவேற்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏராளமான அதிமுக தொண்டர்கள் அவரை வரவேற்று உற்சாக கோஷம் எழுப்பினர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *