சென்னையில் நடைபெற்ற உலகத் தமிழர்கள் ஒன்று கூடல் விழா மற்றும் தமிழர் திருநாள் விழா கோலாகல கொண்டாட்டம்.!!

தமிழகம்

சென்னை கலைவாணர் அரங்கில் 6- ம் ஆண்டு உலகக் தமிழர் திருநாள் மற்றும் உலகத் தமிழ் வம்சாவளி ஒன்று கூடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு, சிறப்பு விருந்தினராக
கேரளா மாநில முன்னாள் ஆளுநர் பி.சதாசிவம் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தார்.
உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு தலைவர் ஜெ.செல்வகுமார் வரவேற்புரையாற்றினார்.

இந்நிகழ்வில்,
இலங்கை வட மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன், விஐடி வேந்தர் விஸ்வநாதன், பப்புவா நியூ கினி நாட்டின் மத்திய அமைச்சர்
சசீந்திரன் முத்துவேல், மலேசிய முன்னாள் அமைச்சர் கமலநாதன்
மற்றும் அமெரிக்கா, இலங்கை,கனடா,சிங்கபூர், மலேசியா,பப்புவா நியூ கினி, மொரிசியசு உள்ளிட்ட நாடுகளில் இருந்து உலகத் தமிழர்கள் குடும்பத்துடன் பங்கேற்றனர். மலேசியப் பெண் ஆளுமைகள் எழுத்தாளர் பொன் கோகிலம், கவிதா வீரமுத்து , ராமேஸ்வரி  மற்றும் பலர்் கலந்து கொண்டனர்.

நிகழ்வில்,
இலங்கை வட மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன் பேசியதாவது :-

ஜனாதிபதி கோத்தபாய வால் இலங்கையில் வசிக்கும் தமிழர்கள் வாழ்விற்கு எவ்வளவு பாதகமாக, சாதகமாக இருக்கும் என்பது கேள்விக்குறியாக உள்ளது.
போர்க்குற்றவாளிகளை இலங்கையில் உயர்ந்த பதவிகள் வழங்கப்படுகிறது.
என்று பேசினார்.

உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு சார்பில்
ஷாம் தயாளன், ஹிப் ஹாப் தமிழா ஆதி, ஜெகதீசன் என்பவருக்கு
சாதனைத் தமிழர் என்ற விருதும்,
பிரேமா விஜயகுமார், எம்ஜிஆர் பல்கலைக்கழக துணை வேந்தர் சீதா லட்சுமிக்கு சாதனைத் தமிழச்சி என்ற விருது,
மலேசியா ஊடகத்தை சேர்ந்த தியாகுவிற்கு
சிறந்த தமிழ் ஊடக விருது, திருவள்ளுவர் உருவ இட்லி தயாரித்தற்கு இனியவன் என்பவர் உள்ளிட்ட பலருக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

6-ம் உலகத் தமிழர் திருநாள் நூல் வெளியிடப்பட்டது.

பின்னர் நிருபர்களிடம்
இலங்கை வட மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன் பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-

இலங்கை நடந்த படுகொலை குறித்து
சர்வதேச விசாரணையில் 8 வருடங்களாக எதுவும் செய்யவில்லை.
இது தொடர்பாக
அமெரிக்க பிரதியிடம் கேட்டோம்.
இருப்பினும்,
அமெரிக்கா இதில் இருந்து விலகி விட்டனர்.
மேலும், இது தொடர்பாக
ஐசிசி க்கு கொண்டு போக நடவடிக்கை எடுத்து கொண்டு இருக்கிறோம்.
இலங்கை படுகொலை குறித்த விசாரணைக்கு
சர்வதேச நாடுகள் நெருக்கடி கொடுத்தால் தான் தீர்வு கிடைக்கும்.
இப்போதைய அரசு
இலங்கை தமிழர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது.

இலங்கையில் உள்ள மக்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும்.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே இதுகுறித்து ஒப்பந்தம் போட்டால் தான் முடியும்.
கிழக்கு மாகாணத்தின் பிரச்சனை வேறு, அங்கு மக்கள் தொகை அதிகமாக குறைந்து விட்டது.

போர் முடிந்து இத்தனை ஆண்டுகளாகயாகியும்
பொருளாதார நிலையில் இலங்கை தமிழர்கள் இன்னும் மேம்படவில்லை.
அதற்கான நீதியை இலங்கை மத்திய அரசு இன்னும் வழங்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *