தமிழகம் முழுவதும் 29 டிஎஸ்பிக்கள் பணியிட மாற்றம்: டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவு

தமிழகம்

சென்னை உட்பட தமிழகம் முழுவதும் 29 டிஎஸ்பிக்களை பணியிட மாற்றம் செய்து சட்டம், ஒழுங்கு டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதன்படி, வேலூர் சிபிசிஐடி பிரிவில் இருந்த ஏ.அண்ணாதுரை, திருவண்ணாமலைக்கு மாற்றப்பட்டுள்ளார். மதுரையில் நில மோசடி தடுப்பு பிரிவில் பணி செய்த டி.கணேசன் சேலம் சட்டம், ஒழுங்கு பிரிவுக்கு மாற்றலாகி உள்ளார். சேலத்திலிருந்த என்.பிரேமானந்தன் கோவைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

கிருஷ்ணகிரியில் பணியாற்றி வந்த எஸ்.ராஜகுமார் தருமபுரிக்கு மாற்றலாகி உள்ளார். தருமபுரியில் பணியாற்றி வந்த பி.அன்புராஜ், திருவாரூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை எழும்பூரில் ரயில்வேயில் இருந்த ஏ.சிவகுமார் திருமங்கலம் சட்டம், ஒழுங்குக்கு மாற்றப்பட்டுள்ளார். மதுரையில் இருந்த டி.பிரபாகரன் விருதுநகருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்

சென்னை மத்திய குற்றப்பிரிவில் இருந்த ஆர்.தேன் தமிழ் வளவன் திருவொற்றியூருக்கும், சென்னை மாநில குற்ற ஆவண காப்பகத்தில் இருந்த இ.மகேஷ் விழுப்புரத்துக்கும், பூக்கடை சரகத்திலிருந்த கே.ரவி சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *