வி ஐ டி சென்னையில்  தேசிய அளவில் கலை- விளையாட்டு போட்டி : பிப்ரவரி 6,7, 8 ம் தேதியில் நடக்கிறது.!!

சென்னை தமிழகம்

வி ஐ டி சென்னையில்
தேசிய அளவில் கலை- விளையாட்டு போட்டி :
பிப்ரவரி 6,7, 8 ம் தேதியில் நடக்கிறது.

சென்னை.பிப்.3-

சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் விடுதியில் விஐடி கல்லூரியின் துணைத்தலைவர் சேகர் விஸ்வநாதன், துணை வேந்தர் ஆனந்த் ஏ.சாமுவேல், கூடுதல் பதிவாளர் மணோகரன் ஆகியோர் நிருபர்களிடம் பேட்டி அளித்தனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது :-

விஐடி சென்னையில் வைப்ரன்ஸ்- 2020 தேசிய அளவிலான கலை
மற்றும் விளையாட்டு விழாவில் பிரபல திரைப்பட நடிகர் விவேக் ஓபராய்
திரைப்பட இசை அமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் கிரிக்கெட் வீரர் பியூஸ்
சாவ்லா ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

தேசிய அளவில் மிகப்பெரிய
கலை மற்றும் விளையாட்டுத் திருவிழா வைப்ரன்ஸ்
ஆண்டுதோறும் வி ஐ டி சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த
ஆண்டு இந்த விழா பிப்ரவரி 6, 7, 8 விஐடி சென்னையில் நடைபெறுகிறது.
இதில் ஐ ஐ டி, என்ஐ டி மற்றும் இந்தியாவின் தலைசிறந்த
பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் என இந்தியாவின் அனைத்து
மாநிலங்களிலிருந்தும் சுமார் 10,000 மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கு
பெறுகின்றனர்.

கிரிக்கெட், கால்பந்து, டெபிள் டென்னிஸ்,வாலி பால், மாரத்தான், சைக்கிள் போட்டி,
மொத்தம் 163 போட்டிகள் நடைபெறுகிறது.
70  பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் இருந்து  மாணவர்கள்
பங்கேற்கின்றனர்.
பரிசுத் தொகை ரூபாய் 6 லட்சம் முக்கிய நிகழ்வாக வைப்ரன்ஸ் முதல்
நாள்  (பிப்ரவரி 6-ம்தேதி )அன்று – பிரபல திரைப்பட பின்னணி இசையமைப்பாளர்
தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசைக் கச்சேரி நடைபெறுகிறது. அதேபோல் பிரபல
கிரிக்கெட் வீரர் பியூஸ் சாவ்லாவும் முதல் நாள் விழாவில் கலந்து
கொள்கிறார்.

இரண்டாம் நாள் (பிப்ரவரி 7-ம்தேதி ) பிரபல பாடகர் மோகித் சவான் குழுவினரின்
பாட்டு கச்சேரி, சர்வதேச புகழ் பெற்ற ஸ்ரே கண்ணா குழுவின் நடனமும்
நடைபெறுகிறது வைப்ரன்ஸ் நிறைவு விழாவில் பிப்ரவரி 8-ம்தேதி  ) பிரபல
திரைப்பட நடிகர் விவேக் ஒப்ராய் கலந்து கொள்கிறார்.

விஐடி கல்லுாரியில்
எம்.ஐ.சி தகவல் பிரிவு , எம்.ஐ.சி இயற்பியல், எம்.ஐ.சி அறிவியல்,
பிடெக் கணினி அறிவியல்,
எம்.டெக். தொழில் துறை சார்ந்த பகுதிநேர படிப்புகள் உள்ளிட்டவை 2021 கல்வி ஆண்டில்
ஜீன், ஜீலையில் இருந்து இந்த படிப்புகள் துவங்க உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
பின்னர், வைப்ரன்ஸ் (டீ சர்ட்) அறிமுகப்படுத்தினர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *