சென்னை டி.என்பி.எஸ்.இ தலைமை அலுவலகம் அருகே திமுக இளைஞர் அணி – மாணவர் அணி சார்பில் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் டிஎன்பிஎஸ்இ முறைகேட்டை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.!!

சென்னை

சென்னையில்
டின்பிஎஸ்இ  முறைகேட்டை கண்டித்து  ஆர்ப்பாட்டம் :-

உள்ளாட்சி தேர்தல் வெற்றி இடைவேளை தான்.
சட்டமன்ற தேர்தல் தான் கிளைமாக்ஸ்
உதயநிதி ஸ்டாலின் பேச்சு …!

சென்னை டி.என்பி.எஸ்.இ தலைமை அலுவலகம் அருகே
திமுக இளைஞர் அணி – மாணவர் அணி சார்பில் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில்
டிஎன்பிஎஸ்இ முறைகேட்டை கண்டித்து
கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்
தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில்,  இளம்பெண்கள், தாய்மார்கள், திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உட்பட்ட ஏராளமோனோர்
டிஎன்பிஎஸ்இ முறைகேட்டை கண்டித்து பதாகைகளை வைத்து கொண்டு
திரளாக கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில்,
ஆர்ப்பாட்டம் இது கண்டண ஆர்ப்பாட்டம், தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம், தேர்வாணைய முறைகேட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்,அரசு நடத்தும் தேர்வு எல்லாம் போட்டி தேர்வா, பெட்டி தேர்வா, படிச்சு முடிச்சு வேலை தேடும் இளைஞர் வேலை போச்சு எல்லாம் போச்சு, தேர்வாணையம் மீது மக்கள் வைத்த நம்பிக்கை எல்லாம் வீணாபோச்சு, குரூப்
4 எழுதிய தேர்வில் எழுதிய மை அழுயுமா,
அமைச்சர் ஜெயக்குமாரே
பதவி விலகு உடனடியாக பதவி விலகி,
குரூப் தேர்வு எழுதுனா அரசு வேலை கிடைக்கும்னு நியாயமா இது நியாயமா ஜெயக்குமாரே இது நியாயமா, வேண்டாம் வேண்டாம் டிஎன்பிஎஸ்இ தேர்வுக்கு ஏஜெண்ட்கள் வேண்டாம், ஆர்ப்பாட்டம் இது ஆர்ப்பாட்டம் எடுப்புடி அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம், இது திமுகவின் ஆர்ப்பாட்டம்,தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணா, கலைஞர், ஸ்டாலின் ஆகியோர் கட்டிகாக்கும் அறவழி முறையில் ஆர்ப்பாட்டம், வேண்டும் வேண்டும் நீதி வேண்டும், தேர்வாணையம் வழக்குகளை சிபிஐ க்கு மாற்று, நாரிபோச்சு டிஎன்பிஎஸ்இ நாரிபோச்சு,
என்று அனைவரும்
கண்டண கோஷங்களை எழுப்பினார்கள்.

இதில், மாவட்ட செயலாளர்கள் பி.கே.சேகர் பாபு,
மாதவரம் சுதர்சன், மா.சுப்பிரமணியன்,
மாணவர் அணி செயலாளர்
சி.வி.எம்.பி.எழிலரசன்,
திமுக மாநில மாணவர் அணி துணைச்செயலாளர் எஸ். மோகன், திமுக மாவட்ட
இளைஞரணி
துணை செயலாளர்கள் அன்பில் பொய்யா மகேஷ், தாயகம் கவி,  ஜோயல்,அசன் முகமது ஜின்னா ஆர்.டி.சேகர்,  ரங்கநாதன் எம்.எல்.ஏ, தேவ ஜவஹர்,புழல் நாராயணன் மற்றும் திமுக மாவட்ட நிர்வாகிகள்,திமுக இளைஞரணி மாணவரணி,  நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில், உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-
அரசு வேலை கிடைத்தால் அவர்களுடைய தலைமுறையே மாறும் என்ற நோக்கத்துடன் கொண்டு வநத்துதான் டிஎன்பிஎஸ்இ தேர்வு முறை.

தமிழகத்தில் நடந்து கொண்டு இருக்கிறது தரகெட்ட ஆட்சி.
குரூப் 4 தேர்வில்
தேர்ச்சிபெற்று முதல் 100 இடங்களைப் பிடித்தவர்களில் பெரும்பாலானோர்
இராமேஸ்வரம் கீழக்கரை தேர்வு மையத்தில் தேர்வு எழுதியவர்கள் என்று
தெரியவந்தது. இதற்கு முன்பு நடந்த குரூப் 2 ஏ தேர்விலும் இதே மையத்தில்
தேர்வெழுதியவர்களே முதல் 55 இடங்களில் 37 இடங்களைக்
கைப்பற்றியிருந்தனர்.
இதுகுறித்து,
தேர்வு எழுதிய மாணவர்களிடம்,
இதை கேட்டால் தாத்தாவிற்கு தீதி கொடுக்க சென்றோம் அதனால் ராமேஸ்வரத்தில் சென்று தேர்வு எழுதினோம் என்று தெரிவிக்கிறார்கள்.

இந்த ஆட்சியில் திமுக தலைவர் ஸ்டாலின் சொல்வது போல்
கலெக்ஷன், கரெப்பஷன், கரப்சன் தான் நடந்து கொண்டு இருக்கிறது.
இன்று அமைச்சரவை கூடுகிறது அங்கு மக்கள் பிரச்சனை பற்றி பேச மாட்டார்கள்.
உள்ளாட்சி தேர்தலில் பெற்ற வெற்றி நம் தலைவர் ஸ்டாலினுக்கு கிடைத்த வெற்றி.
உள்ளாட்சி தேர்தலில் 80 சதவீதம் திமுக வெற்றி, முறையாக நடத்திருந்தால் 90 சதவீதம் வெற்றி பெற்றிருப்போம்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இறப்பு குறித்து ஒரு நபர் ஆணையம் ஆறுமுகசாமி ஆணையம் எதுவும் வெளியிட வில்லை. இதற்கு ஒரு முந்திரி கொட்டை அமைச்சர் பதிலளிக்கிறார் , இடைத்தரகர் பெயரும் முந்திரி கொட்டை தான். இதுவரை கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் சாதாரண ஒட்டுநர் உள்ளிட்டோர் மட்டுமே.
உள்ளாட்சி தேர்தல்  வெற்றி வெறும்
இடைவேளை தான்.
கிளைமாக்ஸ் சட்டமன்ற தேர்தல் தான்.
சிபிஐ விசாரணை கோரவில்லை என்றால்
இன்னும் பல்வேறு போராட்டங்கள் நடைபெறும்.
இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *