ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளரை அறிவித்தது அமமுக

தமிழகம்

சட்டப்பேரவை தேர்தலுக்கு தயாராகும் வகையில், ஸ்ரீரங்கம் தொகுதிக்கான வேட்பாளரை அமமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் அறிவித்துள்ளார்.

ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட வண்ணாங்கோயில் பகுதியில் நேற்று முன்தினம் அவர் பேசும்போது, “தமிழகத்தில் மக்கள் விரோத துரோக ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முட்டை வழியாக துரோக ஆட்சியின் ஊழல்கள் தற்போது வெளிப்பட்டு வருகின்றன. இந்த ஊழல் நிச்சயம் அணுகுண்டாக மாறி மக்கள் விரும்பாத இந்த ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வரும். ஜெயலலிதாவின் ஆட்சியை அமமுக அமைக்கும். அந்த ஆட்சி அமைய ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளராக போட்டியிடப்போகும் ஆர்.மனோகரனை மாபெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என்றார்.

வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஆர்.மனோகரன், 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் திருச்சி கிழக்குத் தொகுதியில் போட்டியிட்டு வென்றவர். அப்போதைய ஜெயலலிதா ஆட்சியில் அரசு தலைமைக் கொறடாவாக இருந்தார். 2016 தேர்தலில் திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிட்டு தோற்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *