லைம் லைட் பிக்சர்ஸ் தயாரிப்பில் நிஜார் இயக்கத்தில் ராம்குமார் – வரலஷ்மி சரத்குமார் – இனியா நடிக்கும் “கலர்ஸ்” படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்.!!

தமிழகம்

லைம் லைட் பிக்சர்ஸ் தயாரிப்பில்

நிஜார் இயக்கத்தில்

ராம்குமார் – வரலஷ்மி சரத்குமார் – இனியா நடிக்கும்

“கலர்ஸ்”

சௌதி மற்றும் U.A.E. மொழிகளில் பல படங்களை தயாரித்துள்ள பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான “லைம் லைட் பிக்சர்ஸ்” முதன்முதலாக இந்தியாவில் தமிழில் “கலர்ஸ்” எனும் படத்தை தயாரிக்கின்றது. நேற்று இப்படத்தின் பூஜை இனிதே நடைபெற்றது.

நடிகர்கள் ஜெயராம், திலீப், சுரேஷ் கோபி, குஷ்பு , மாதவி, தேவயானி உள்ளிட்ட பல பிரபல நடிகர்களை வைத்து மலையாளத்தில் 25 படங்களை இயக்கியுள்ள இயக்குனர் நிஜார் இயக்கும் முதல் தமிழ் படம் “கலர்ஸ்”. இவர் மலையாளத்தில் பிரபலமான கமர்ஷியல் இயக்குனர் என்பது குறிப்பிடதக்கது.

ராம்குமார் கதாநாயகனாக அறிமுகமாகும் இப்படத்தில் வரலஷ்மி சரத்குமார், இனியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும் மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கின்றனர்.

ப்ரியதர்ஷன், ஜோசி உள்ளிட்ட பல பிரபல இயக்குனர்களுடன் பணியாற்றியவரும், தமிழ், மலையாளம், ஹிந்தி என பல மொழி படங்களுக்கு இசையமைத்தவருமான S.P.வெங்கடேஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

தொழில்நுட்ப கலைஞர்கள்

தயாரிப்பு – ஆஷி இட்டிகுலா
இயக்கம் – நிஜார்
நிர்வாக தயாரிப்பு – ஜியா உம்மன்
கதையாசிரியர் – ப்ரசாத் பாரபுரம்
இசை – S.P.வெங்கடேஷ்
ஒளிப்பதிவு – சஜன் கலதில்
படத்தொகுப்பு – விஷால்
புரொடக்ஷன் டிசைனர் – வல்ஷன்
புரொடக்ஷன் கண்ட்ரோலர் – நிஹார் முகமது
சண்டைப்பயிற்சி – “ரன்” ரவி
நடனம் – ப்ரதீப்
பாடல்கள் – வைரபாரதி
மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)

இணை இயக்குனர்கள் – ரஷல் நியாஷ், சத்யசரவணா
துணை இயக்குனர் – அஸ்வின் மோகன்
உதவி இயக்குனர் – சபீர்
காஸ்ட்டுயூமர் – குமார் எடப்பால்
மேக்கப் – லிபின் மோகனன்
ஸ்டில்ஸ் – அனில் வந்தனா
டிசைன்ஸ் – முரளி

விநியோகம் – லைம் லைட் பிக்சர்ஸ்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *