சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியின் கணித மன்றம் – 10ம் ஆண்டு விழாவில் மாணவ மாணவிகளுக்கு பரிசு கோப்பை வழங்கப்பட்டது.!!

சென்னை தமிழகம்

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியின்
கணித மன்றம் – 10ம் ஆண்டு விழாவில் மாணவ மாணவிகளுக்கு பரிசு கோப்பை வழங்கப்பட்டது.!!

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள செட்டிநாடு வித்யாஷ்ரம் கணித மன்றத்தின் 10ஆம் ஆண்டு விழா இன்று இப்பள்ளியின் கலையரங்கில் நடந்தது. இவ்விழாவில் செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளி தாளாளர் டாக்டர் திருமதி.மீனா முத்தையா இப் பள்ளி முதல்வர் திருமதி.அமுதலட்சுமி துணை முதல்வர் திருமதி. தரணி
கணேசன் ஆகியோர் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.

கணிதப் பாடத்தினைக் கடினமாகக் கருதி கற்க அஞ்சும் மாணவர்க்கு,
அச்சத்தினைப் போக்கி கணக்குகளை விரும்பி எளிதாகச் செய்வதற்குப் புதிய நுட்பங்களை அறிமுகப்படுத்தி, கணிதப் பாடத்தை உயர்நிலைக்குக் கொண்டு
வருவதே இப்பள்ளியின் கணித மன்றத்தின் நோக்கமாகும்.

இவ்விழா நிகழ்ச்சி கணிதத்துறையின் தலைவர் திரு.சில்வெஸ்டர்
அவர்களின் வரவேற்புரையுடன் தொடங்கியது. பள்ளியின் முதல்வர்
டாக்டர் திருமதி. அமுதலஷ்மி அவர்களும், துணை முதல்வர் திருமதி. தரணி
கணேசன் அவர்களும் பயனள்ள சிறந்த கருத்துகளை மாணவர்களுக்கு
வழங்கினார்கள். சிறப்பு விருந்தினர் முனைவர் சௌரிஷ் தாஸ் அவர்கள்
(இணை பேராசிரியர், சென்னை கணிதவியல் நிறுவனம்) போட்டிகளில் வெற்றி
பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.

கணிதப்பாடத்தின் முக்கியத்துவத்தையும், அதனைக் கற்கின்ற பல்வேறு
வழிமுறைகள் பற்றிய அவரது ஊக்க உரை மாணவர்களுக்கு அறிவூட்டுவதாய் சிறப்பாக
அமைந்தது. துறையின் மூத்த ஆசிரியை திருமதி. S.சுகந்தி அவர்கள் நன்றி கூறினார்.

வரவேற்பு நடனத்துடன் மாணவர்களின் கலை நிகழ்ச்சி தொடங்கியது.
இந்நடனம் பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்தது. கணித
குறியீடுகளின் அமைப்பில் ஆடப்பட்ட தசாவதாரம் கண்களுக்கு விருந்து
படைத்தது. வாழ்க்கைப் பற்றிய தமிழ்ப்பாடலும் எண்கள் பற்றிய ஆங்கிலப் பாடலும் செவிகளைக் குளிரச் செய்தது நாடகங்கள் சிந்திக்க வைத்தன. கணிதம் பற்றிய மாணவர்களோடு நடந்த
கலந்துரையாடல் பயனள்ளதாக இருந்தது. இந்த பிரமாண்ட விழாவில் பள்ளி மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் உள்பட ஏராளமான முக்கிய பிரமுகர்கள் வருகை தந்து சிறப்பித்தனர்.

CHETTINAD VIDYASHRAM
R.A.PURAM, CHENNAI- 28.

MATH CLUB 10 ANNIVERSARY

The tenth Anniversary of Math Club was conducted on Monday 10 h
February 2020 with the blessings of the Correspondent, Dr. Mrs. Meena Muthiah.
The Principal Mrs. Amudha Lakshmi graced the function.

The Math Club of Chettinad Vidyashram has been striving to take the
subject to greater heights for over a decade now, by introducing new, quick
techniques to solve problems, removing the fear of math among children, who
feel that Math is tough.

The program commenced with the welcome address by the Head of the
Math department Mr. Sylvester. The Chief Guest Dr. SOURISH DAS, Associate
Professor, Mathematics, Chennai Mathematical Institute rendered an
enlightening speech on importance of Math and its application in various arenas.
The vote of thanks was given by the Senior teacher, Mrs. Suganthi S.

As a part of the program we had a cultural show by our students. The stage
exhibited their exquisite creative talent. The welcome dance “DASAVATARAM”
depicting geometrical shapes was a real treat to the eyes. Mathematical skits
unfolded the magical connections of math in our everyday life. Another
spectacular dance depicted the formation of angles. Fun and facts activity and an
English song on love for numbers by primary students was captivating. An
interactive session among students was indeed praiseworthy. A Tamil song
presented the concepts and life skills related to math. The program concluded with
the national anthem.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *