தமிழக பட்ஜெட் இன்று தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தமிழக சட்டசபையில் தாக்கல் செய்தார்.!!

தமிழகம்

தமிழக பட்ஜெட் 2020 தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார்…

1. கீழடியில் அருங்காட்சிகம் அமைக்க ரூ.12.21 கோடி ஒதுக்கீடு

2. பள்ளி கல்வித்துறைக்கு அதிகபட்சமாக ரூ.34,181 கோடி ஒதுக்கீடு.

3. தொழில்துறைக்கு ரூ.2,500 கோடி ஒதுக்கீடு.

4. தொழிலாளர் நலன் துறைக்கு 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

5. தகவல் தொழில்நுட்பத்துறைக்கு ரூ.153 கோடி ஒதுக்கீடு.

6. சென்னை – பெங்களூரூ தொழில் வழித்தடத்திட்டத்தின் கீழ் திருவள்ளூர் மாவட்டத்தில் 21,996 ஏக்கர் பரப்பளவில் பொன்னேரி தொழில்முனைய மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படும்.

7. உயர் கல்வித்துறைக்கு ரூ.5052 கோடி ஒதுக்கீடு.

8. சுகாதாரத்துறைக்கு ரூ.15,863 கோடி ஒதுக்கீடு.

9. சமூக நலன் மற்றும் மதிய உணவுத்திட்டத்திற்கு ரூ.5,935 கோடி ஒதுக்கீடு.

10. வேளாண்மைத்துறைக்கு 11,894 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

11. கால்நடைத்துறைக்கு ரூ.199 கோடி ஒதுக்கீடு.

12. பொதுப்பணித்துறை, நீர்பாசனத்திற்காக ரூ.6,991 கோடி ஒதுக்கீடு.

13. அம்மா உணவகத்திற்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு.

14. நெடுஞ்சாலை துறைக்கு ரூ.5,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

15. போக்குவரத்து துறைக்கு ரூ.2,716 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

16. மின்சாரத்துறைக்கு ரூ.20,115 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

17. சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறைக்கு ரூ.607 கோடி ஒதுக்கீடு.

18. கைத்தறி துறைக்கு ரூ.1,224 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

19. இந்து சமய அறநிலையத்துறைக்கு 281 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

20. பொதுப்பணித்துறை – கட்டட பணிகளுக்காக 1,453 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

21. சமூக நலன் துறைக்கு 2,535 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

22. அரசுப்பேருந்துகளில் பெண்களின் பாதுகாப்புக்காக சிசிடிவி கேமரா அமைக்க ரூ.75 கோடி ஒதுக்கீடு.

23. மாணவர்களுக்கு மடிக்கணிணி வழங்க ரூ.966 கோடி ஒதுக்கீடு.

24. காவல்துறைக்கு ரூ. 8876 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

25. சிறைச்சாலை துறைக்கு ரூ.392 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

26. அரசு பள்ளிகளில் உயர்தர பரிசோதனை கூடங்கள் அமைக்க ரூ.520 கோடி ஒதுக்கீடு.

27. வரும் நிதியாண்டில் ரூ.59,209 கோடி கடன் வாங்க தமிழக அரசு திட்டம்.

28. கிராம உள்ளாட்சி வளர்ச்சிக்கு ரூ.6754 கோடி ஒதுக்கீடு.

29. 2,298 கோடி மதிப்பிலான அணைக்கட்டு திட்டத்திற்கு 300 கோடி ஒதுக்கீடு.

30. ராமேஸ்வரத்தில் சுற்றுலா வசதியை மேம்படுத்த ரூ.9.80 கோடி ஒதுக்கீடு.

31. தீயணைப்புத்துறைக்கு ரூ.405 கோடி ஒதுக்கீடு.

32. ரூ.77.94 கோடியில் நெல்லை கங்கை கொண்டானில் உணவு பூங்கா அமைக்க நிதி ஒதுக்கீடு.

33. கிராமபுறங்களில் வாழ்வாதாரத்தை பெருக்க முதலமைச்சரின் 5 ஆண்டுகால கிராம தன்னிறைவு திட்டம் அறிமுகம்.

34. குடிமராமத்து திட்டத்தின் கீழ் 1364 நீர்ப்பாசன பணிகள் 500 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்படும்.

35. ராமநாதபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு ரூ.3,041 கோடி ஒதுக்கீடு.

36. கிறிஸ்துவ தேவாலயங்களின் பழுதுபார்ப்பு மற்றும் மறுசீரமைப்புப் பணிகளுக்காக வழங்கப்படும் நிதியுதவி 1 கோடியில் இருந்து 5 கோடி ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

37. மசூதிகளின் பராமரிப்புக்காக ஆண்டுதோறும் வழங்கப்படும் நிதியுதவி 60 லட்சம் ரூபாயிலிருந்து 5 கோடியாக உயர்த்தி வழங்கப்படும்.

38. கைத்தறித்துறைக்கு ரூ.1,224 கோடி ஒதுக்கீடு.

39. பள்ளி சீருடை, பாடப்புத்தகங்கள், காலணி வழங்க ரூ.1,018 கோடி ஒதுக்கீடு.

40. முதலைமைச்சரின் பசுமை வீடுகள் திட்டத்திற்கு 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

41. வரும் நிதியாண்டில் 1,12,876 வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயம்.

42. சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ.3,100 கோடி ஒதுக்கீடு.

43. ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1,650 கோடி ஒதுக்கீடு.

44. உணவு மானியத்திற்கு ரூ.6,500 கோடி ஒதுக்கீடு.

45. இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு திட்டத்திற்கு ரூ.218 கோடி ஒதுக்கீடு.

46. நடப்பாண்டில் 10,276 சீருடைபபணியாளர்கள் பணியமர்த்தப்படுவர்.

47. சென்னை – குமரி தொழில் மண்டல வழித்தட திட்டத்திற்காக ரூ.1,000 கோடி ஒதுக்கீடு.

48. அம்மா விரிவான ஆயுள் காப்பீடு, விபத்து காப்பீடு திட்டத்திற்கு ரூ.250 கோடி ஒதுக்கீடு.

49. மாதவரம் – சோழிங்கநல்லூர் இடையே 52 கிமீ தூர மெட்ரோ ரயில் பணிகள் விரைவில் தொடங்கப்படும்.

50. கரும்பு விவசாயிகள் நுண்ணீர் பாசனத்தை மேற்கொள்வதை ஊக்குவிக்க 75 கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்கீடு.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *