மக்கள் நீதி மய்யம் 3ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு பத்மஸ்ரீ நாயகன் கமல்ஹாசன் நற்பணி மன்றம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஆழ்வார்பேட்டையில் நடந்தது மக்கள் நீதி மய்யம் கட்சி செய்தி தொடர்பாளர் முரளி அப்பாஸ் கொடியேற்றினார்.!!

சென்னை

மக்கள் நீதி மய்யம் 3ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு டாக்டர் கமல்ஹாசன் அவர்களின் நல்லாசியுடன் கொடியேற்றம் நிகழ்ச்சி ஆழ்வார்பேட்டை சிக்னல் அருகில் மக்கள் நீதி மய்யம் தலைமை அலுவலகம் எதிரில் ஆழ்வார்பேட்டை பாலம் அருகே வெகு சிறப்பாக நடைபெற்றது. மாநில செயலாளர் திரு முரளி அப்பாஸ் – (ஊடகம்) அவர்கள் கொடியேற்றி பொதுமக்கள்  தொண்டர்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.

கொடியேற்ற விழாவிற்கு வருகை தந்த மயிலாப்பூர் – சேப்பாக்கம் திருவல்லிக்கேணி மாவட்ட, மய்ய நகர, வட்ட பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள், மகளிர் அணி, இளைஞர் அணி, தொழிலார்கள் அணி, நற்பணி அணி, ஐடி அணி பொறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் மயிலாப்பூர் மாநகர செயலாளர் பைக் பி.ரமேஷ் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் மின்னல் வி.ரமேஷ், லோகு உள்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பத்மஸ்ரீ நாயகன் கமல்ஹாசன் நற்பணி மன்றம் பைக் ரமேஷ் இந்நிகழ்ச்சியை சிறப்பாக செய்திருந்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *