பத்திரிகையாளர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி மாத்திரைகள் வழங்கப்பட்டது.!!

சென்னை தமிழகம்

பத்திரிகையாளர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி மாத்திரைகள் வழங்கப்பட்டது…!!

இந்திய ஊடக பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் பத்திரிகையாளர்களுக்கு இன்று வழங்கப்பட்டது.

இந்திய ஊடக பத்திரிகையாளர்கள் சங்க டெல்லி தலைமை அறிவுறுத்தலின் பேரில் மாநிலத் தலைவர் மோகன் தாரா அவர்களின் உத்தரவின் பேரில் மாநில செயலாளர் சங்கர் அறிவுறுத்தலின் பேரில் சென்னையில் களப்பணியில் தினமும் ஈடுப்பட்டு இருக்கும் பத்திரிகையாளர்களுக்கு Arsenicum album 30 என்ற நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் வழங்க இந்திய ஊடக பத்திரிகையாளர்கள் சங்கம்* ஏற்பாடு செய்தது. பிரபல ஹோமியோபதி டாக்டர் சுந்தரமூர்த்தி அவர்கள் நமது சங்கத்துடன் இணைந்து பத்திரிகையாளர்களுக்கு நோய் எதிர்ப்பு மாத்திரைகள் வழங்க சம்மதம் தெரிவித்தார். இதனை தொடர்ந்து சென்னை புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள டாக்டர் சுந்தர்ஸ் கிளினிக் வளாகத்தில் இந்திய ஊடக பத்திரிகையாளர்கள் சங்க இணைச் செயலாளர் ஸ்பைடர் சீனிவாசன் முன்னிலையில் சங்கத்தின் தேசிய குழு உறுப்பினர் சபீர் பாஷா அவர்கள் பத்திரிகையாளர்களுக்கு மாத்திரைகள் வழங்கினார். பேராண்மை ச.விமலேஷ்வரன், மாலை நியூஸ் கதிர்வேல், பேராண்மை நியூஸ் நிருபர் ராம் உட்பட 100க்கு மேற்பட்ட பத்திரிகையாளர்கள், புகைப்படக் கலைஞர்கள், ஒளிப்பதிவாளர்கள் கலந்துக் கொண்டு பயன்பெற்றனர்…

மாத்திரைகளை பெற்றுக் கொண்ட பத்திரிகையாளர்கள் அனைவரும் மருத்துவருக்கு நன்றி தெரிவித்தனர்…

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *