காஞ்சிபுரத்தில் குறைந்த ஊதியம் பெறும் பத்திரிக்கையாளர்களுக்கு இந்திய ஊடக பத்திரிகையாளர் சங்கம் சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.!!

தமிழகம்

காஞ்சிபுரத்தில் குறைந்த ஊதியம் பெறும் நிவாரணம் வழங்கிய – IMJU

தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த நாள் முதல் தொய்வு இல்லாமல் பணியாற்றி வரும் பத்திரிகையாளர்கள் பலர் வறுமையில் வாடும் நிலையில் உள்ளனர். அதில் பலருக்கு ஊதியமும் முறையாக வழங்கப்படாமல் இருப்பதை கருத்தில் கொண்டு இந்திய ஊடக பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பணியாற்றும் பத்திரிகையாளர்கள் பலருக்கு அரிசி மூட்டை, சமையல் எண்ணெய், மளிகைப் பொருட்கள் மற்றும் முகக் கவசங்கள் ஆகியவை IMJU சங்கத்தின் மாநிலத் தலைவர் மோகன் தாரா தலைமையில் மாநிலச் செயலாளர் சங்கர், இணைச் செயலாளர் ஸ்பைடர் சீனிவாசன், பத்திரிகையாளர் பேராண்மை விமலேஷ்வரன் ஆகியோர் முன்னிலையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பத்திரிகையாளர்கள் சங்கத்தில் இன்று நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. தங்களுக்காக சென்னையில் இருந்து வந்து நிவாரணம் வழங்கியதற்கு காஞ்சிபுரம் மாவட்ட பத்திரிகையாளர்கள் சார்பில் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்…

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *