ஏ.ஆர்.ரகுமான் பாலிவுட் படங்களில் இசை அமைப்பதை தடுக்க ஒரு கும்பல் சதி செய்வதாக புகார்.!!

சென்னை

தனக்கு எதிராக பாலிவுட்டில் ஒரு கும்பல் வதந்தி பரப்புகிறது என பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் அதிர்ச்சி புகார் தெரிவித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் தான் ஏன் பாலிவுட் படங்களில் அதிக அளவு பணியாற்ற முடியாமல் இருக்கிறது என்பது பற்றி பேசியுள்ளார். பாலிவுட்டில் ஒரு கும்பல் தனக்கு வாய்ப்பு கிடைப்பதை தடுக்க வேண்டும் என்பதற்காகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என ஏ.ஆர் ரகுமான் தெரிவித்துள்ளார். ஏற்கனவே சுஷாந்த் சிங் மறைவுக்கு பிறகு பாலிவுட்டில் வாரிசு கலாச்சாரம் மற்றும் கேங் சேர்ந்திருப்பது போன்றவற்றை பற்றி அதிக விமர்சனங்கள் உள்ளது. இந்நிலையில் இசையமைப்பாளர் ஏ. ஆர்.ரகுமான் இப்படி கூறியிருப்பது திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *