மலேசிய பினாங்கு மாகணத்தில் 200 ஆண்டுகள் பழமையான ஓலைச்சுவடி,கால் சிலம்புகள்.பழமையான டிபன் கேரியர்கள் உள்பட புராதான பொருட்கள் கண்காட்சி ஏராளமான பள்ளி மாணவ-மாணவிகள் பொதுமக்கள் கண்டு களிக்கின்றனர்.!!

சென்னை

மலேசியாவில் உள்ள பினாங்கு மாநிலத்தில் ஜார்ஜ் டவுன் பகுதியில் இந்திய மரபியல் அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் 200 ஆண்டுகள் பழைமையான புராதான பொருட்கள் அருங்காட்சியகத்தில் உள்ளது. 100 வருடம் பழமையான உணவு தூக்கு சட்டி (டிபன் கேரியர்), 300 ஆண்டுகள் பழமையான கால்சிலம்புகள், 200 ஆண்டுகள் பழமையான ஒலைச்சுவடி, எழுத்தாணி மற்றும் மலேசிய இந்திய வம்சாவழினர் பயன்படுத்திய பாரம்பரிய பழங்கால பொருட்களான வெற்றிலைபாக்கு பெட்டி, 100 ஆண்டுகள்பழமையான ஜல்லிக்கட்டு காளைகளின் கழுத்துமணி, காளைமாட்டின் கொம்பில் சொருகும் கொப்பி, 100 வருடம் பழமையான யானை தந்தம், வெள்ளியினால் செய்யப்பட்ட கால்கட்டை (பழங்கால செருப்பு) 100 ஆண்டுகள் முன்பு ஆங்கிலேயர் காலத்தில் மலேசிய இந்திய வம்சாவழி குடும்பத்தை சேர்ந்த புகைப்படங்கள், 1957 மலேசிய சுதந்திர காலகட்டத்தின் சேகரிப்புகளான தமிழில் எழுதப்பட்ட மலேசிய வரைபடம், மலேசிய சுதந்திர நாளன்று வெளியிடப்பட்ட மலேசிய வரைபடம் தாங்கிய ஆண்கள் சட்டை மற்றும் ஏராளமான புராதான பொருட்கள் இந்த அருங்காட்சியகத்தில் உள்ளது. மேலும் நேருஜி, சுபாஷ் சந்திரபோஸ், இந்திரா காந்தி, அண்ணா, எம். ஜி. ர் மற்றும் பல இந்தியா, தமிழ்நாட்டு பெருந்தலைவர்களின் மலேசிய வருகைக்கான புகைப்படங்களையும் இங்கே காணலாம். அதிலும் 1947-ல் இந்தியா சுதந்திரம் பெற்ற நாளில் மலேசியாவில் இந்த கொண்டாட்டத்தை கோலாகலமாக கொண்டாடிய புகைப்படங்கள் இங்கே பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. அதுபோல் பல மலேசிய- இந்திய தொடர்பான பல ஆவணங்கள் பாதுக்காத்து பராமரிக்கப்பட்டு வருகிறது. உதாரணத்திற்கு அன்று S.S.ரஜுலா, ஸ்தேட் ஒப் மட்ராஸ் மற்றும் சிதம்பரம் போன்ற கப்பல்களின் புகைபடங்கள், மலேசிய- இந்திய கப்பல் பயணத்திற்காக உபயோகித்த நுழைவு சீட்டுகள் , கப்பலுக்காக காத்திருந்த மக்கள் அலைகளின் புகைபடங்கள் , இந்தியாவிற்கு புறப்படும் முன் பொருட்களும் அன்பளிப்புகளும் கொண்ட பெட்டிகளை மக்கள் சுமந்து நிற்கும் காட்சியின் புகைபடங்கள் , பத்திரங்கள் மற்றும் ஆவணங்களை இங்கே காணலாம். மேலும் பர்மா தமிழர்களின் வாழ்வியல் சார்ந்த ஆவணங்களும் இங்கே பார்வைக்கு உள்ளன. அருங்காட்சியகத்தை 3 ஆண்டுகளாக மலேசிய பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் சார்பில் பினாங்கு துணை முதல்வர் ப.ராமசாமி அவர்களின் வழிகாட்டுதலின்படி இந்து அறப்பணி வாரிய நிர்வாக இயக்குனர் டத்தோ மு.ராமசந்திரன் அவர்களின் அறிவிருத்தலின்படி திரு பிரகாஷ் ஜெகதீசன் புனிதா முத்தையா தம்பதியினர் இந்த அருங்காட்சியகத்தை நடத்தி வருகின்றனர். இந்த புராதான அருங்காட்சியகத்தை காண பள்ளி , கல்லூரி , கல்வி ஆராய்சி மாணவர்கள் மற்றும் உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஏராளமானவர் வந்து செல்கின்றனர். முக்கிய குறிப்பாக ‘லோக்டவுன்’ முடிந்து கடந்த 4 ஜூலை 2020-ல் மீண்டும் அருங்காட்சியகம் பார்வைக்கு திறக்கபட்டுவிட்டது என குறிப்பிட்டனர். தமிழ் மூதாதையர் வாழ்க்கைமுறை மற்றும் பாரம்பரியம் பற்றி இன்றைய தலைமுறைகள் அறிந்து கொள்ள இந்த அருங்காட்சியகம் நடத்தபடுவதாக இந்த அருங்காட்சியக நிர்வாகிகள் தெரிவித்தனர். ஒவ்வொரு பொருட்களும் நம் பொக்கிக்ஷங்கள் , இனிப்பு பட்க்ஷணங்கள் சாப்பிடுவது போல இனிய பழைய நினைவுகளை நம் கண் முன்னே நிழலாட செய்யும் என்பதில் சிறிதும் ஐயமில்லை என்கின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *