ஊரடங்கு நேரத்தில் சாலையோரங்களில் வசிக்கும் ஏழைகளுக்கு பசி போக்கும் சென்னை காங்கிரஸ் பிரமுகர் …!

சென்னை

ஊரடங்கு நேரத்தில் சாலையோரங்களில் வசிக்கும் ஏழைகளுக்கு பசி போக்கும் சென்னை காங்கிரஸ் பிரமுகர் …!

சென்னை.ஆக.15 –

ஊரடங்கு நேரத்தில் மனிதநேயமிக்க செயல்களில் பல்வேறு தரப்பினரும் மதம், இனம், மொழி, கட்சி என பாகுபாடின்றி செய்து வருகின்றனர். ஒரு மனிதனுக்கு வாழ்க்கையில் உணவு என்பது மிகவும் முக்கியமானது.
அப்படிப்பட்ட உணவை இந்த ஊரடங்கு நேரத்திலும் சென்னை சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் பிரமுகர் சாலையோரங்களில் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து உணவில்லாமல் தவிக்கும் ஏழை-எளிய மக்களுக்கு இரவு நேரங்களில் இலவசமாக வழங்கி வருகிறார்.

அதன், பற்றிய சிறப்பு தொகுப்பு :-

சென்னை எழும்பூர் பகுதியில் வசிப்பவர் தினேஷ் பாபு (வயது 28). இவர் காங்கிரஸ் கட்சியின் மேற்கு மாவட்ட பட்டதாரி அணி மாவட்ட தலைவராக உள்ளார்.
ஊரடங்கு காலகட்டத்தில் சாலையோரங்களில் தவிக்கும் ஏழை- எளிய மக்களுக்கு, அவரது நண்பர்களோடு இணைந்து வீட்டிலேயே உணவு சமைத்து ஒரு நாளைக்கு சுமார் 300-க்கும் மேற்பட்டோருக்கு அவர்கள் சொந்த செலவில் உணவளித்து வருகிறார். இதுவரையில், பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் இரவில் இவர் வழங்கும் உணவால் பசி தீர்ந்து வாழ்ந்து வருகின்றனர்.
இதுகுறித்து, சமூக சேவகர் எழும்பூர் தினேஷ் பாபு விடம் கேட்டபோது :-

நான் வசிக்கும் பகுதிகளில் சாலை ஓரங்களில் இருக்கும் மக்கள் ஒருவர் கூட பசியால் இறந்து விடக்கூடாது என்ற எண்ணத்துடன் இந்த ஊரடங்கு நேரத்திலும் என்னுடைய சொந்த பணத்தில் உணவு தயாரிப்பு இரவு நேரங்களில் வழங்கி வருகிறேன். இது எனக்கு மன திருப்தியாகவும், சந்தோஷமாகவும் இருக்கிறது. இதற்கு என் குடும்பத்தினர், மற்றும் நண்பர்கள் பிரதீப், சந்தோஷ், சரண், பரத், ஆகியோர் பெரிதும் உறுதுணையாக இருக்கிறார்கள்.
மேலும், அனாதை ஆசிரமங்களில் சென்றும் உணவு, அத்தியாவசிய பொருட்கள் வழங்கி வருகிறேன்.
என் உயிர் உள்ளவரை இதுபோன்ற செயல்களில் நான் தொடர்ந்து ஈடுபடுவேன் என்றும் மகிழ்ச்சியாக தெரிவித்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *