ரூ499/- போஸ்ட்பெய்டு திட்டத்தை மேம்படுத்தும் ஏர்டெல்

தொழில்நுட்பம்

பார்தி ஏர்டெல் நிறுவனம் தனது சந்தாதாரர்களுக்கு அதிக டேட்டா தரும் வகையில் அதன் ரூ499 போஸ்ட்பெய்டு திட்டத்தை மேம்படுத்தியுள்ளது. இந்த 499 திட்டம் ‘மை ப்ளான் இன்பைனிடி ப்ளான்’ வகையின் கீழ் வருகிறது. மேலும் இதில் ரூ399, ரூ649, ரூ799 மற்றும் ரூ1199 மதிப்புள்ள திட்டங்களும் உள்ளன. இந்நிறுவனம் சமீபத்தில் 90ஜிபி டேட்டா வழங்கும் வகையில் தனது ரூ649 திட்டத்தை மேம்படுத்தியது.

ஏர்டெல் நிறுவனம் ஏர்டெல் நிறுவனம் புதுப்பித்துள்ள இந்த ரூ499 திட்டத்தில், டேட்டா மட்டுமின்றி 100 எஸ்.எம்.எஸ், வரம்பற்ற உள்ளூர், எஸ்.டி.டி மற்றும் நேசனல் ரோமிங் அழைப்புகள் போன்றவையும் வழங்கப்படுகின்றன.மேலும் இந்த போஸ்ட்பெய்டு திட்டத்தில் 500ஜிபி வரை ரோல் ஓவர் வசதியுடன் 3ஜி/4ஜி டேட்டா வழங்கப்படும். எளிதாக கூறவேண்டுமென்றால், நடப்பு மாதத்தின் பயன்படுத்தப்படாத டேட்டா, அடுத்த மாதத்திற்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

இந்த ரூ499 திட்டத்தில் வேறு சில சலுகைகளும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏர்டெல் பயனர்கள் ஓராண்டிற்கான அமேசான் ப்ரைம் சந்தா வழங்கப்படும். மேலும் விங்க் டிவியின் லைவ் டிவி மற்றும் மூவிஸ் தொகுப்பிற்கான சந்தா மற்றும் மொபைல் சேதம் அடைந்தால், அதற்கான பாதுகாப்பு போன்றவையும் ரூ499 திட்டத்தில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் ஏர்டெல் நிறுவனம் பயனர்களுக்கு அதிக டேட்டா வழங்கும் வகையில் தனது ரூ799 மற்றும் ரூ1,199 மை ப்ளான் இன்பைனிடி-யை மாற்றியமைத்தது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *