ஜியோவிற்கு போட்டியாக 50ஜிபி கூடுதல் டேட்டா வழங்கும் பிஎஸ்என்எல்.!

தொழில்நுட்பம்

ஜியோ நிறுவனத்தின் ஜிகாஃபைபர் அறிவிப்பை தொடர்ந்து பிஎஸ்என்எல் நிறுவனம் இப்போது அதன் ஃபைபர் பிராட்பேன்ட் சலுகைகளில் கூடுதல் டேட்டா வழங்குவதாக அறிவித்துள்ளது. மேலும் இந்த சலுகை பல்வேறு மக்களுக்கு பயன்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் குவுவுர் ஃபைபர் பிராட்பேன்ட் ரூ.1,045, ரூ.1,395 மற்றும் ரூ.1,895 போன்ற திட்டங்களில் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 50ஜிபி வரை கூடுதல் டேட்டா வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேகம்: மேலும் ரூ.1,045 பிஎஸ்என்எல் ஃபைப்ரோ uld 1045 சிஎஸ்48 திட்டத்தில் மாதம் 150ஜிபி வரை டேட்டா 30Mbps வேகத்தில்வழங்கப்படுகிறது. அதேபோன்று ரூ.1,395 ஃபைப்ரோ bbg uld1395 சிஎஸ்49 திட்டத்தில் 200ஜிபி வரை டேட்டா 40Mbps வேகத்தில்வழங்கப்படுகிறது. மேலும் கடைசியாக ரூ.1,895 திட்டத்தில் மாதம் 250ஜிபி வரை டேட்டா 50Mbps வேகத்தில்வழங்கப்படுகிறது. குறிப்பாக இந்த சலுகைகள் தற்சமயம் கேரளாவில் மட்டுமே கிடைக்கிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *