சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 70வது பிறந்நாள் விழா சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி மகளிர் அணியினர் ஏழைகளுக்கு அன்னதானம், மரக்கன்று. முககவசம் வழங்கி கொண்டாட்டம்.!!

சென்னை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 70வது பிறந்நாள் விழா சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி மகளிர் அணியினர் ஏழைகளுக்கு அன்னதானம், மரக்கன்று. முககவசம் வழங்கி கொண்டாட்டம்.!!

சென்னை டிசம்பர் 13

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் 70 வது பிறந்தநாளையொட்டி சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி ரஜினி மக்கள் மன்ற மகளிர் அணி சார்பில் மகளிர் பகுதி செயலாளர் ஏ.ராஜேஸ்வரி ஆனந்தன் ஏற்பாட்டில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் அருகே பொதுமக்களுக்கு 250 மரக்கன்றுகளையும், 200 ஏழைகளுக்கு அன்னதானமும், 200 பேருக்கு முக கவசமும் ரஜினி மக்கள் மன்ற மத்திய சென்னை மாவட்ட இணை செயலாளர் சூரியா அவர்களும் வர்த்தக பிரிவு துணை செயலாளர் ரமேஷ்குமார், இணை செயலாளர் வடிவேல் பகுதி துணை செயலாளர் குணா மகளிர் அணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ஆரோக்கிய ராணி பகுதிமகளிர் அணி செயலாளர் ஏ.ரஜேஸ்வரி ஆனந்தன் ஆகியோர் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி பகுதி செயலாளர் நாகராஜ், இணை செயலாளர் ஜி. மதுரை பாலு, இணை செயலாளர் ஆர்.துளசி, துணை செயலாளர்கள் முனியம்மா, சித்ரா, லலிதா மற்றும் ஏராளமான மகளிர் அணியினர் கலந்து கொண்டனர்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *