பாஜக ஆதரவை அனைத்துக் கட்சிகளும் நாடுகிறது மாற்றுக் கட்சியினர் இணையும் நிகழ்ச்சி மற்றும் தேர்தல் பிரச்சார விழாவில் எல்.முருகன் பேச்சு.!!

தமிழகம்

பாஜக ஆதரவை அனைத்துக் கட்சிகளும் நாடுகிறது
மாற்றுக் கட்சியினர் இணையும் விழாவில் எல்.முருகன் பேச்சு.!!


சென்னை, ஜன 8
பாரதிய ஜனதா கட்சி மத்திய சென்னை கிழக்கு மாவட்டம் துறைமுகம் தொகுதி தங்கசாலை மணிக்கூண்டு அருகில் பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் எல்.முருகன் கலந்துகொண்ட மாற்றுக் கட்சியினர் பாஜகவில் இணையும் விழா மற்றும் ஏராளமான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா முன்னாள் மண்டல குழு தலைவர் வி.கிரிநாத் தலைமையில் நடந்தது.வரவேற்புரை மாவட்டபொது செயலாளர் டி.ரவி நிகழ்த்தினார். மாவட்ட தலைவர் விஜய் ஆனந்த் முன்னிலை வகித்தார்.இந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஏராளமான எழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மேலும் மாற்று கட்சியினர் ஏராளமானவர்கள் பா.ஜ.க கட்சியில் இணைந்தனர்.இக்கூட்டத்தில் தமிழ்நாடு பாஜக இணைப் பொருளாளர் பி.சுதாகர் ரெட்டி,மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், மாநில துணை தலைவர்கள் எம். என் ராஜா, வி.பி.துரைசாமி, எம்.சக்கரவர்த்தி, வழக்கறிஞர் பிரிவு மாநில தலைவர் ஆர்.சி,பால் கனகராஜ்,தேசிய பொதுக்குழு உறுப்பினர் வி.காளிதாஸ்,மாநில மீனவர் அணி தலைவர் எஸ்.சதீஷ்குமார், கலாச்சாரப் பிரிவு தலைவர் காயத்ரி ரகுராம், மாநில அறிவுசார்பிரிவு தலைவர் ஷெல்வி, ஒ.பி.சிஅணி மாநில துணை தலைவர் ஆர்.கே.சுரேஷ், முஸ்லிம் ராஷ்ட்ரீய மஞ்ச்பாத்திமா அலி,செயற்குழு உறுப்பினர் மதன கோபால் ராவ், கிருஷ்ணாநதானி,வர்த்தக பிரிவு மாவட்ட செயலாளர் கே.ஏ.டி.பாலு,மத்திய சென்னை கிழக்கு மாவட்ட நிர்வாகிகள்கே. ஆர். இந்திரன், ரங்கநாயகலு, ஆர்.முரளி, எம்.ராஜேந்திரன், ஏ.பி.குமார், எஸ்.சிவசங்கர் ரெட்டி, கே.கே.ஆர்.கார்மேகம், பாஜக முக்கிய நிர்வாகிகள் ஜித்து லோஹர், என்.ஜெகன் மோகன் ராம்,மண்டல தலைவர்கள் கிழக்கு மண்டலம் ஆர்.ரெங்கராஜா,மேற்கு மண்டலம் பட்டு எல்.கோபிநாத்,மற்றும் வட்ட தலைவர்கள் டிக்காம்சந்த், கே.பாண்டியன், இ.ராமகிருஷ்ணன்,செந்தில், ஆர்.கார்த்திக், ஏ. வேலு, மத்திய சென்னை கிழக்கு மாவட்ட பட்டியல் அணி துணைத் தலைவர் நா.விஜய் ஆனந்த், நன்றியுரை துறைமுக வடக்கு மண்டல தலைவர் எஸ்.சேது நிகழ்த்தினார்.இந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஏராளமான பாஜக தொண்டர்களும் மகளிர் அணி நிர்வாகிகளும் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர்.
இதில் கலந்து கொண்ட பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் முருகன் பேசியதாவது
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் மாற்றுக் கட்சியில் இருந்து பாரதிய ஜனதா கட்சியின் இணைந்து வருகின்றனர், வல்லமை மிக்க ஆற்றல் மிக்க தலைவர் பிரதமர் மோடியின் வழிகாட்டுதல் தமிழகத்திற்கு தேவை என்பதால் தான் இவ்வளவு பேர் பாஜக வில் இணைந்து வருகின்றனர். பாஜக காலூன்ற முடியாது என பல பேர் கூறினர். ஆனால் இன்று பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவை அனைத்து கட்சிகளும் கேட்கிறது.5 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் மத்திய அரசு தமிழகத்திற்கு நிதி ஒத்துக்கியுள்ளது, ஏழை மக்களுக்கு வங்கி கணக்கு தொடங்கியது. கொரனா காலகட்டத்தில் உதவி தொகை 3 மாதத்திற்கு வழங்கியது. பாரதிய ஜனதா கட்சி, தமிழகத்தில் மட்டும் இன்றி இந்தியா முழுவதும் கழிப்பறை இல்லை என்ற நிலையை ஒழித்துள்ளது, 100 நாள் வேலை திட்டத்தில் மக்களுக்கு கூலி உயர்த்தி கொடுக்கப்பட்டது, 41 லட்சம் விவசாயிகளுக்கு 6000ரூபாய் வங்கி கணக்கில் மத்திய அரசு சார்பில் செலுத்தபட்டது பாஜக ஆட்சியில் தான். ஸ்டாலின் மத்திய அரசை குறை கூறுவது மட்டுமே அவரது வேலையாக வைத்துள்ளார். குறை கூறவில்லை என்றால் அவருக்கு தூக்கம் வராது
,பொய் என்ற சொல்லுக்கு சரியான அர்த்தம் ஸ்டாலின் தான், 4 கோடி பட்டியலின மாணவர்கள் உயர்கல்வி பயில நிதி ஒதுகிக்கனார் மோடி, தமிழக மக்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்டது திமுக காங்கிரஸ் கூட்டணியில் தான். அவர்கள் பாவம் திமுக வை விடாது. தமிழுக்காக எதையும் செய்யாதவர்கள், தமிழ் பண்பாட்டை அழித்தவர்கள் திமுக. 2011ஆம் ஆண்டிற்கு முன் ஆக்கிரமிப்பு அதிகம் செய்தது திமுக தான். திமுகவிற்காக ஜெயலலிதாவால் ஒதுக்கப்பட்ட துறை தான் நில அபகரிப்பு துறை, திமுக என்றால் ஊழல் என்று பொருள். பொதுமக்கள் திமுக என்ற அரக்கனை, அசுரனை தமிழக அரசியலில் இருந்து ஓட விட தயாராகிவிட்டனர் என்று கூறினர்.

 

விழாவில் பேசிய மாநில பொது செயலாளர் கரு.நாகராஜன் பேசுகையில்: 2 லட்ச ரூபாய் விபத்து காப்பீடு திட்டம் போன்றவை மோடி ஆட்சியில் தொடங்கப்பட்டவை. சென்னையில் 5 லட்சம் மக்கள் இருக்கும் போது இருந்த மருத்துவமனைகளை 50 லட்சம் மக்கள் இருக்கும் போது திமுக அதிகப்படுத்த வில்லை. ஏழை மக்களுக்கு ஓயவூதிய திட்டம் திமுக ஆட்சியில் வழங்கப்பட்டதா? என கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய அவர், மகளிர் சுய உதவிக்குழு போன்று விவசாய உதவிக்குழு தொடங்கப்பட உள்ளது. ஏழை மாணவனும், பணக்கார மாணவனும் ஒரே பாடத்திட்டத்தை படிக்க அறிமுக்கப்படுத்தப்பட்டதே புதிய கல்வி கொள்கை. அரசு பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் உருப்பட்ட கூடாது என்பதே திமுகவின் திட்டம். அரசு பள்ளி மாணவர்கள் அனைவரும் முட்டாள் என்று ஸ்டாலின் கூறுகிறார். வேளாண் திட்டத்தை பற்றி ஸ்டாலினிற்கும் அவரது கட்சி காரர்களுக்கும் என்ன தெரியும். எங்களுடன் வேளாண் திட்டம் பற்றி திமுக விவாதிக்க தயாரா
என்றும் ,ஊழலுக்கு அகராதி திமுக எனவும் ஏழை மக்களுக்காக வாழ்பவர் மோடி, மிகப்பெரிய ஊழல் சாம்ராஜ்யத்தை உருவாக்கியது திமுக. அவர்கள் அடித்த கொள்கையினால் தான் சென்னை மாநகராட்சிக்கு 16 வருடமாக மேயர் இல்லை. 1 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்களை கொன்ற திமுக தான் ஈழத்தமிழர் பற்றி பேசுகிறது. அனைத்து துறைகளிலும் இந்தியாவை தூக்கி பிடித்தவர் பிரதமர் மோடி என்று கூறினார்.

 

வி.பி.துரைசாமி பேசுகையில்:
அதிக ஆண்டு எதிர் கட்சியாக இருந்து‌
மக்களுக்கு சேவை செய்து பின்பு ஆட்சியை பிடித்த கட்சி பாஜக.
தமிழகத்தில் உள்ள 140 கோடி மக்களையும் காப்பாற்ற கூடிய ஒரே தலைவன் பாரத பிரதமர் மோடி.
பாஜக விவசாயிகளை காக்கின்ற கட்சி
மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டத்தை திமுக,காங்கிரஸ், கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் நன்றாக படித்து விட்டு என்னுடன் வாதாட வாங்கள் என்று நான் சவால் விடுகிறேன்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டத்தை வரவேற்ற ஒரே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மட்டும்தான்.
திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியை இனிமேல் மனுதாரர் பாரதி என்றுதான் அழைக்க வேண்டும்.
திமுகவில் நல்ல மனிதர்களுக்கு மரியாதை கிடையாது.
விழாவில் மாநிலத் தலைவர் எல்.முருகன் மதுராந்தகத்தை சேர்ந்த லட்சுமணன் என்ற விவசாயிக்கு ரூ 8 லட்சம் மதிப்புள்ள டிராக்டர் மற்றும் ஏராளமான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியை பாஜக மகளிரணி சௌதா மணி தொகுத்து வழங்கினார்.விழாவில் மாநில தலைவர் முருகனுக்கு ஆளுயர மாலை அணிவிக்கப்பட்டது

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *