மலேசிய நாட்டில் நடிகர் விஜய்யின் தீவிர தமிழ் ரசிகை இயக்குனர் வதனி குணசேகரன் இயக்கிய மனசு இப்ப பறக்குது உசரத்துல இசை வீடியோ வெளியானது.!!

சென்னை

 

 

மலேசிய நாட்டில் நடிகர் விஜய்யின் தீவிர தமிழ் ரசிகை இயக்குனர் வதனி குணசேகரன் இயக்கிய மனசு இப்ப பறக்குது உசரத்துல இசை வீடியோ வெளியானது.!!

மலேசியவை சேர்ந்த ரீச் புரடெக்ஷன் தயாரிப்பில்
மனசு இப்ப பறக்குது உசரத்துல இசை வீடியோ காணொளியை பொங்கல் அன்று உலகம் முழுவதும் ரீச் புரெடக்ஷன் யூடியூப் சேனலில் வெளியாகி பல்லாயிரக்கணக்கானோர் கண்டு களித்தனர் இந்த மனசு இப்ப பறக்குது உசரத்துல இசை வீடியோ 5 நாடுகள் இணந்து இந்த இசை வீடியோவை உருவாக்கி உள்ளனர்.
இந்த பாடல் வீடியோவை இசை அமைத்து பாடியவர் ஸ்ரீலங்காவை சேர்ந்த ஷமீல்
ஜெ இப்பாடலை எழுதியவர் இத்தாலியை சேர்ந்த தானு, இந்த இசை வீடியோவை இயக்கியவர் மலேசியாவை சேர்ந்த வதனி குணசேகரன் இந்த இசை வீடியோவில் கதாநாயகனகாக நடித்தவர் ஜெர்மனியை சேர்ந்த சி.ஜெ.ஜெர்மனி, இந்த விடியோ கதையில் வில்லனாக நடித்தவர் சிங்கப்பூரை சேர்ந்த ஸ்டீபன் ஜக்காரியா இந்த 5 நாட்டை சேர்ந்த படைப்பாளிகள் கூட்டு முயற்சியில் இந்த வீடியோ உருவாக்க பட்டது. இந்த இசை வீடியோ படப்பிடிப்பு மலேசியாவில் உள்ள சிகின்சான் என்ற இடத்தில் படமாக்கபட்டது. இந்த வீடியோவில் கதாநாயகியாக மூன்நிலா,இந்த இசை வீடியோவில் சிறப்பு நடிகர்காளாக கர்ணன் ஜிகிராக், சூரியபிரகாஷ், அமீஷா ரோஷினி,பிரேம் டி.ஏரன் ராவ், ராஜசூரியன்,ஆகியோர் நடித்துள்ளனர். மிகவும் புதுமையான முறை எடுக்கபட்ட காதல் ஸ்டோரி இசை வீடியோ இது எல்லா தொடங்களுக்கு பின்னாடி வலுவான ஒரு காரணம் இருக்கும் இல்ல ஒருத்தரோட ஆர்வத்தை தூண்டற மாதிரி ஏதாவது ஒரு விஷயம் இருக்கும் இல்லையா? அப்படி தான் நம்ம விஜய் ரசிகையான வதனியோட வாழ்க்கையில அப்படிபட்ட ஆர்வத்தை தூண்டி விவசாயத்தை பற்றிய சிந்தனைய உருவாக்கி அவங்கள இயக்க வச்சது கத்தி திரைப்படம். இளைய தளபதி விஜய் விவசாயிகளுக்காக நடத்தன அந்த போராட்டம் அந்த படத்த பார்த்தவங்களுக்குள்ள எப்படி ஒரு மாற்றத்தை ஏற்படுத்துச்சோ அதே போல இயக்குனர் வதனிக்குள்ளையும் அது ஏற்படுத்தி இருக்கு. அதோட பிரதிபலிப்பு தான் இந்த இசை வீடியோ. கத்தியில அந்த கதிரேசன் பாத்திரம் அளவுக்கு இல்லனாலும், இந்த இசை வீடியோவின் கதாநாயகன் கதிரேசனை வச்சி விவசாயிகளையும் விவசாயத்தையும் உயிருள்ளவரைக்கும் பாதுகாக்கணும்னு அவங்க எடுத்த இந்த முயற்சி நிஜமாகவே வரவேற்க வேண்டியது தான்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *