தமிழக முஸ்லிம்களின் கோரிக்கைகள்” நூல் வெளியீடு நிகழ்ச்சி- பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் நூலை வெளியிட்டார்.!!

சென்னை

தமிழக முஸ்லிம்களின் கோரிக்கைகள்” நூல் வெளியீடு நிகழ்ச்சி- பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் நூலை இன்று வெளியிட்டார்.!!

தமிழக முஸ்லிம்களின் சமூக-பொருளாதார-அரசியல் பிரச்சனைகள், தேவைகள் இவற்றை மையப்படுத்தி அதற்கான தீர்வுகளை தேர்தல் கோரிக்கைகளாக முன்வைத்து தமிழக அரசியல் கட்சிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லும் நோக்கோடு ‘தமிழக முஸ்லிம்களின் கோரிக்கைகள்’ என்ற நூலை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இன்று (09-02-2021) வெளியிட்டுள்ளது.
சென்னை பத்திரிக்கையாளர் சந்திப்பு மன்றத்தில் வைத்து நடைபெற்ற இந்த நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் M.முஹம்மது சேக் அன்சாரி நூலை வெளியிட்டார். இந்நூலில் தமிழக முஸ்லிம்களின் சமூக-பொருளாதார-அரசியல் பிரச்சனைகளுக்கான தீர்வுகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது, குறிப்பாக ‘இஸ்லாமோஃபோபியா’ எனும் இஸ்லாமிய வெறுப்பு நடவடிக்கைகளுக்கு எதிரான சட்டம் இயற்ற வேண்டும், முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடை உயர்த்த வேண்டும் கல்வி வளாகங்களில் மதவாத செயல்பாடுகளை தடுக்க வேண்டும். வக்ஃபு வாரியம் சீரமைக்கப்படவேண்டும் அரசியல் வழக்குகளை திரும்ப பெறவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளது. பாஜக அல்லாத மதசார்பின்மை, ஜனநாயகம், அனைத்து தரப்பையும் உள்ளடக்கி வளர்ச்சி ஆகியவற்றின் மீது நம்பிக்கையுள்ள தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளின் கவனத்திற்கும் ‘தமிழக முஸ்லிம்களின் கோரிக்கைகள்’ கொண்டு செல்லப்பட்டு அவர்களின் தேர்தல் கால அறிக்கையிலும், தேர்தலுக்கு பின்னுள்ள அவர்களின் செயல் திட்டங்களிலும் எமது கோரிக்கைகள் இடம்பெற வழிவகை செய்வதற்கான முதல் தொடக்கமே இந்நூல்.
இந்நிகழ்வில் பாப்புலர் ஃப்ரண்ட்-மாநில பொதுச்செயலாளர் முகைதீன் அப்துல் காதர், மாநில செயலாளர் நாகூர் மீரான், சென்னை மண்டல செயலாளர் அஹ்மத் முகைதீன் தென்சென்னை மாவட்ட தலைவர் அபூபக்கர் சாதிக் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.M.அப்துல் ரசாக் மாநில மக்கள் தொடர்பு ஒருங்கிணைப்பாளர்
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
தமிழ்நாடு ஆகியோர் கலந்து கொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *