சின்னக் கலைவானர் விவேக் திடீரென இன்று அதிகாலை மாரடைப்பால் காலமானார்…திரையுலகினர் அதிர்ச்சி.!!

சென்னை

சின்னக் கலைவானர் விவேக் திடீரென இன்று அதிகாலை மாரடைப்பால் காலமானார்…திரையுலகினர் அதிர்ச்சி.!!

 

சென்னை விருகம்பாக்கத்தில் வசித்து வந்த நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக நேற்று  சென்னை வடபழனியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவருக்கு மருத்துவமனையில் எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அதி காலை 4.35 மணியளவில் அவர் உயிரிழந்தார்.

1986ம் ஆண்டில் பாலச்சந்தர் இயக்கத்தில் ‘மனதில் உறுதி வேண்டும்’ என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் நடிகர் விவேக் அறிமுகமானார். தமிழ் சினிமாவில் தனது நகைச்சுவையுடன் சேர்ந்து சமூகக் கருத்துக்களையும் தொடர்ந்து பேசிவந்தவர். அதனால் அவருக்கு சின்னக் கலைவானர் என பொதுமக்கள் பட்டம் சூட்டி மகிழ்ந்தனர் 50க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்தவர் நடிகர் விவேக்.2009-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதைப் பெற்றார். முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மீது மிகுந்த பற்றுக் கொண்டிருந்த அவர் ரசிகர்களையும் மாணவர்களையும் திரட்டி ஒரு கோடிக்கும் அதிகமான மரக்கன்றுகளை நட்டு சமூகப் பணியாற்றி வந்தார்.இவருடன் மறைவு திரையுலகினரையும் பொதுமக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *