ஊடக துறையினர் முன் களப்பணியாளர்களாக கருதப்படுவார்கள் என மு.க.ஸ்டாலின் அறிவிப்புக்கு பத்திரிகை- ஊடக சங்கங்கள் நன்றி தெரிவித்தன.!!

தமிழகம்

ஊடக துறையினர் முன் களப்பணியாளர்களாக கருதப்படுவார்கள் என மு.க.
ஸ்டாலின் அறிவிப்புக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் மற்றும் சென்னை பத்திரிக்கையாளர் யூனியன்(MUJ) தமிழ்நாடு ஊடக பத்திரிக்கையாளர் சங்கம் தமிழ் நாடு பத்திரிகை புகைப்பட கலைஞர்கள் சங்கங்கள் நன்றி.!!

சென்னை, மே 4
செய்தித்தாள், தொலைக்காட்சி,ஓலி ஊடகத்தில் பணிபுரிபவர்கள் முன்கள பணியாளர்களாக கருதப்படுவார்கள் என்ற திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிப்புக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் -ஊடக பத்திரிகை யாளர்கள் சங்கம்- சென்னை பத்திரிகையாளர் யூனியன் (MUJ) மற்றும் தமிழ்நாடு பத்திரிகை புகைப்பட கலைஞர்கள் சங்கம் நன்றி தெரிவித்துக் கொண்டன
களப்பணியில் ஈடுபட்டு கொரோனா விழிப்புணர்வை மக்களிடம் சேர்த்துக் கொண்டு இருக்கும் பத்திரிகை ஊடகவியலாளர்களை ,முன்களப் பணியாளர்கள் பட்டியலில் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை சென்னை பத்திரிகையாளர் மன்றம் உள்ளிட்ட பத்திரிகையாளர் அமைப்புகள் முன்வைத்து வந்தனர்.
இந்த கோரிக்கையை 24 மணி நேரத்திற்குள் ஏற்று
செய்தித்தாள், காட்சி, ஓலி ஊடகங்களில் பணிபுரிவோர் முன்களப் பணியாளர்களாகத் தமிழகத்தில் கருதப்படுவார்கள். முன்களப் பணியாளர்களுக்கான உரிமைகளும், சலுகைகளும் அவர்களுக்கு உரிய முறையில் வழங்கப்படும் என்று அறிவிப்பு மூலமாக நம்பிக்கை ஒளியைப் பாய்ச்சி உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் மற்றும் ஊடக பத்திரிகையாளர் சங்கம்,சென்னை பத்திரிகையாளர் யூனியன்(MUJ) தமிழ்நாடு பத்திரிகை புகைப்பட கலைஞர்கள் சங்கம் நன்றியை தெரிவித்துக் கொண்டன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *