முதல்வர் ஸ்டாலின் கொரோனோ நோயாளிகளுக்காக ராயப்பேட்டையில் 130 படுக்கைகள் கொண்ட சிகிச்சை மையத்தை தொடங்கி வைத்தார்.!!

சென்னை

 

தமிழக முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் சென்னை, இராயப்பேட்டை,
வெஸ்லி மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய 130 படுக்கைகள் கொண்ட
கொரோனா சிறப்பு மையத்தை திறந்து வைத்து, ஆய்வு செய்தார். இந்த நிகழ்வின் போது,நீர்வளத் துறை
அமைச்சர் துரைமுருகன், மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்
மா.சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு,
நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன்,சட்டமன்ற உறுப்பினர் திரு.உதயநிதி ஸ்டாலின், மருத்துவம் மற்றும்
மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் அரசு உயர்
அலுவலர்கள் உடனிருந்தனர்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *