இன்று முதல் முழு ஊரடங்கு நேற்று தளர்வு அறிவிப்பால் பெரம்பலூர், அரியலூரில் காய்கறி வாங்க குவிந்த மக்கள்-அளவுக்கு அதிகமாக பொருட்கள் வாங்கி சென்றனர்.!!!

தமிழகம் வணிகம்

பெரம்பலூர் : இன்று முதல் முழு ஊரடங்கால் நேற்று தளர்வு அறிவிப்பால் பெரம்பலூரில் காய்கறி சந்தை, இறைச்சிக் கடைக ளில் கட்டுப்பாடின்றி குவிந்த பொதுமக்கள் ஒருவாரத்திற்கு தேவைக்கான பொருட்களை வாங்கி சென்றனர்.2வது அலையில் வேகமா கப் பரவி பேரிழப்பு களை ஏற்படுத்தி வரும் கொரோ னா வைரஸ் தொற்றுப்பர வலைக் கட்டுப்படுத்த தமி ழக அரசு இன்று(24ம்தேதி) முதல் வருகிற 31ம்தேதி வ ரை முழு ஊரடங்கை பிறப் பித்துள்ளது.

இந்நிலையில் பெரம்பலூர் நகராட்சியில் சமூக இடைவெளியை பின் ற்றுவதற்காக வடக்குமாத வி சாலையிலுள்ள உழவர் சந்தை மூடப்பட்டு, அதன் முன்புறமும், இடப்புறமும் காய்கறி வியாபாரம் செய்ய விவசாயிகளிடம் கேட்டு க்கொள்ளப் பட்டது. ஆனா ல் உழவர் சந்தை விவசாயிகளோடு மார்கெட் வியாபா ரிகளும் சேர்ந்துகொண்டு 100க்கும் மேற்பட்ட தரைக் கடைகள் அமைத்து காய்க றி வியாபாரம் நடைபெற்ற து. இங்கு காய்கறிகளை வாங்குவதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டம் அலை மோதியது.சமூக இடைவெ ளியின்றி மக்கள் கூடி காய்கறி வியாபா ரம் விறுவிறுப்பாக நடந்தது.

இதில்குறிப்பாக பொது மக்கள் பலரும் 4நாட்களுக் குத் தேவையான காய்கறி களை கட்டைப் பைகளில் கிலோக் கணக்கில் வாங்கி யதால் விற்பனையாளர்க ள் காய்கறி விலையை திடிரென உயர்த்தி விற்கத்தொ டங்கினர்.குறிப்பாக நேற்று முன்தினம் வரை 5கிலோ 50ரூபாய்க்கு விற்கப் பட்ட தக்காளி நேற்று 2கிலோ 50 ரூபாய்க்கு விற்கப் பட்டது. நேற்று முன்தினம் கிலோ ரூ20க்கு விற்ற கத்திரிக்காய் நேற்று கிலோ ரூ40க்கு விற்கப் பட்டன. இதுபோல் பல காய்கறிகளின் விலை கூடுதலாக விலைவைத்தே விற்கப்பட்டன.

வடக்கு மாதவி சாலையில், பழைய பஸ்டாண்டு,ரோவர் வளைவு, தோமினிக் பள்ளி பிரிவுரோடு, விளாமுத்தூர் பிரிவுரோடு, 4ரோடு மின் நகர், துறைமங்கலம் பங்களா ஸ்டாப் ஆகியப் பகுதிக ளில் இறைச்சிக் கடைகளி ல் கூட்டம் அலைமோதியது.பாலக்கரை பகுதியில் வேன்களில், திருச்சி சாலை ஓரங்களில் காய்கறிகள் விற்கப்பட்டன. எங்குமே சமூக இடைவெளி கடைபி டிக்கவில்லை. வடக்குமாதவி சாலையில் வாகனப் போக் குவரத்து அதிகம் காணப்ப ட்டதால் அடிக்கடி போக்குவ ரத்து
கொரோனா வைரஸ் தொற் றுப் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு இன்று(24ம்தே தி)முதல் வரும் 31ம்தேதி வரை முழு ஊரடங்கை பிறப்பித்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாடுஅரசுப் போக்கு வரத்துக்கழகம் சார்பாக நேற்று பெரம்பலூர் துறைமங் கலம் டெப்போவிலிருந்து மொத்தமுள்ள 61 புறநகர் பஸ்களில், 27 புறநகர் பஸ் கள் தலைநகர் சென்னைக் கு அனுப்பப் பட்டிருந்தன.

மீதமுள்ள 34புறநகர் பஸ்க ளும், மொத்தமுள்ள 32டவுன் பஸ்களில் 29டவுன் பஸ் களும்இயக்கப்பட்டன.மொ த்தத்தில் பெரம்பலூர் டெப் போவிலிருந்து 63அரசு பஸ் கள் இயக்கப்பட்டும் அதில் 30 சதவீதப் பயணிகள் கூட அமர்ந்து செல்லவில்லை. இதனால் புதுபஸ்டாண்டு, பழைய பஸ்டாண்டு ஆகிய இரண்டு பஸ்டாண்டுகளு மே வெறிச்சோடி காணப்ப ட்டன.

பெரம்பலூர் மாவட்டத்தில் வழக்கமாக இயக்கப்படும் 40தனியார் பஸ்களும், 80க் கும் மேற்பட்ட மினி பஸ்க ளும் இயக்கப்படவில்லை. குறைந்தஅளவிலான ஷேர் ஆட்டோக்கள், மினி லோடு ஆட்டோக்கள், வேன்கள் மட் டுமே இயக்கப் பட்டன. நூற் றுக் கணக்கானோர் பைக்குகளில் மட்டுமே பயணித்தனர்.

பொதுமக்கள் மற்றும் சில்லறை வியாபாரிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.மேலும் காய்கறி விலையை முறைப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *