அதிமுக ஆட்சியில் பணி அமர்த்தப்பட்ட களப்பணியாளர்கள் விவகாரம் காமாலை நோய் கண்டவனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் ஓ.பி.எஸ் மீது அமைச்சர் சேகர் பாபு கடும் தாக்கு !!

தமிழகம் வணிகம்

அதிமுக ஆட்சியில் பணி அமர்த்தப்பட்ட களப்பணியாளர்கள் நீக்கப்படுவதாக
முன்னாள் துணை முதலமைச்சர்
ஓ.பன்னீர்செல்வம்
குற்றச்சாட்டுக்கு, அதுபோன்று யாரும் நீக்கப்பட மாட்டார்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே விளக்கம் அளித்துவிட்டார் என்றும்,
காமாலை நோய் கண்டவனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் என்று
ஓ.பன்னீர் செல்வத்தை, இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு கடுமையான விமர்சித்துள்ளார்.

 

சென்னை கே.கே.நகர் பகுதியில் முழு ஊரடங்கையொட்டி, சென்னை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பும் இணைந்து 1000 மூன்று சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் மூலம் நடமாடும் காய்கறி விற்பனையை இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி, ஆகியோர் துவக்கி வைத்தனர்.
இந்நிகழ்விற்கு, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்ரமராஜா தலைமை தாங்கினார்.
ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா எம்.எல்.ஏ முன்னிலை வகித்தார். இதில், கவிஞர் காசிமுத்து மாணிக்கம், கோவிந்தராஜூலு, சதக்கத்துல்லா, பாண்டியராஜன் உள்ளிட்ட வணிகர் சங்கங்களின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர், அமைச்சர் பி.கே.சேகர் பாபு நிருபர்களிடம் கூறியதாவது :-

ஊரடங்கால் மக்கள் எந்தவகை யிலும் பாதிக்காத வகையில் பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது என்றும், 5 ஆயிரம் தள்ளுவண்டிகள், 2 ஆயிரம் குட்டியானைகள் மூலம் காய்கறி, பழம் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் வியாபாரிகள் இதுபோன்று விற்பனை செய்ய முன்வந்தால் அவர்களுக்கு மாநகராட்சி சார்பில் அடையாள அட்டை வழங்கப்படும்.
கொரோனா காலத்தில் மக்களின் நிலையை கருத்தில் கொண்டு, மனிதாபிமானத்தோடு குறைந்த விலையில் காய்கறி உள்ளிட்டவை கிடைக்க இத்திட்டம் துவங்கப்பட்டுள்ளதாகவும், அதிக விலைக்கு விற்பனை செய்யாத வண்ணம் கண்காணிப்பு நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
எழுப்பூர் ரயில் நிலையத்தில் 200க்கும் மேற்பட்டோர் வீடு செல்ல முடியாமல் தவித்த போது, மாநகராட்சி சார்பில் உடனடி நடவடிக்கை அவர்கள் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த செய்தியாளர் சந்திப்பில் செய்தியாளர் கேட்ட கேள்விக்கு அமைச்சர் சேகர் பாபு பேட்டி அளித்தார்.
கொரோனா பரவலை தடுக்க
அதிமுக ஆட்சியில் பணி அமர்த்தப்பட்ட களப்பணியாளர்கள் நீக்கப்படுவதாக, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம் குற்றச்சாட்டு வைத்துள்ளார் அதுபற்றி கேள்வி கேட்டனர்

அதற்கு சேகர்பாபு கூறியதாவது
காமாலை நோய் கண்டவனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் என்பதுபோல், எங்கெல்லாம் குறைகள் தென்படுமோஎன்று தேடி, தேடி கண்டுபிடிக்கிறார்கள்.
நேற்றைய தினமே, அதிமுக ஆட்சியில் நியமிக்கப்பட்ட களப்பணியாளர்கள்
யாரும் நீக்கப்பட மாட்டார்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்து அதற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார்.

________

பின்னர் நிருபர்களிடம், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சீங் நிருபர்களிடம் கூறியதாவது :-

நடமாடும் காய்கறி கடைகளை கண்காணிக்க மண்டல வாரியாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
நடமாடும் காய்கறி கடைகள் எந்தெந்த இடங்களில் உள்ளது என்பதை மாநாகராட்சி இணையதளத்தில் வெளியிடப்படும் இதன் மூலம் பொதுமக்கள் அறிந்து கொள்ளலாம்.
காய்கறி கடைகள் மற்றும் விலை குறித்து வரும் புகார்களை விசாரிக்க கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தங்களது சந்தேகங்கள் மற்றும் பிரச்சனைகள் இருந்தால் 044 45680200, 9499932899 தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா நிருபர்களிடம் கூறியதாவது :-

முழு ஊரடங்கு காலத்தில் பொது மக்கள், விவசாயிகள் பாதிக்காத வகையில் காய்கறி, பழங்களை வாகனங்கள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.
காய்கறி விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டுமென அறிவுறுத்தியுள்ளோம். மேலும் தினசரி விலையின் அடிப்படையில் காய்கறி, பழங்கள் பொது மக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. விலையை கண்காணிக்க 25 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனை மீறி அதிக விலைக்கு விற்றால் வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *