தமிழக முதல்வருக்கு பத்திரிகை போட்டோகிராபர்கள் சங்கம் சார்பில் கொரோனோ பாதிப்பு நேரத்தில் பணிபுரிந்து வரும் பத்திரிகை மற்றும் ஊடகத்தினருக்கு ஊக்கத்தொகை 5000 வழங்க ஆணையிட்டதற்கு நன்றி தெரிவித்தனர்.!!

சென்னை

 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தமிழ்நாடு பத்திரிகைப் புகைப்படக்
கலைஞர்கள் சங்க (TNPPA) உறுப்பினர்களின் மனம் திறந்த
பாராட்டுக்களும்… நன்றிகளும்……
ஆட்சி பொறுப்பேற்றதும் பத்திரிக்கையாளர்கள் மற்றும்
ஊடக்கத்தினரும் முன்கள பணியாளர்களாக கருதப்படுவர்
என்று அறிவித்து… கொரோனா காலத்தில் பணிச்சுமை மற்றும்
போதிய வருமானமின்றி சோர்வடைந்திருந்த பத்திரிகை
மற்றும் ஊடகத்துறை சார்ந்த அனைவரையும்
ஊக்கப்படுத்தினீர்கள்.
தற்போது பத்திரிகையாளர்கள் – ஊடகவியலாளர்களுக்கு சிறப்பு
ஊக்கத் தொகை 5 ஆயிரம் எனவும், கொரோனா நோயினால்
இறப்பு ஏற்படின் இழப்பீட்டுத் தொகை 10 லட்சமாகவும்
உயர்த்தப்படும் எனவும் தாங்கள் அறிவித்திருப்பது மிகுந்த
மகிழ்ச்சியளிக்கிறது. கொரோனா பாதிப்பின் உச்சத்தில்
நலிவடைந்துள்ள பத்திரிகைப் புகைப்படக் கலைஞர்களுக்கு இது
மிகவும் பேருதவியாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
மேலும், தற்போது நிலவும் இந்த கொரோனா தடுப்பு போரில்
தங்களின் உயிருக்கு உத்தரவாதமில்லாமல் பணியாற்றிவரும்
பத்திரிகை முன்கள பணியாளர்களுக்கு அரசு சார்பில்
மருத்துவக் காப்பீட்டு வசதியை உடனடியாக ஏற்படுத்தி
தருமாறுக் கேட்டுக்கொள்கிறோம்.
தமிழக முதல்வரின் இந்த அறிவிப்பிற்கு TNPPA (தமிழ்நாடு
பத்திரிகைப் புகைப்படக் கலைஞர்கள் சங்கம்) சார்பில் எங்களது
பாராட்டுக்களையும், நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறோம்.என பத்திரிகை போட்டோகிராபர்கள் சங்கத்தின் சார்பில் நிர்வாகிகள் அறிக்கை விடுத்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *