ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம்!!!

வணிகம்

ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம்!

ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடக்கிறது. வழக்கமாக 3 மாதங்களுக்கு ஒரு முறை நடத்தப்பட வேண்டிய இந்த கூட்டம், கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக கடந்த சில மாதங்களாக நடைபெறவில்லை. இந்நிலையில் 8 மாதங்களுக்கு பின்னர் இன்று காலை 11 மணிக்கு ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடக்கிறது. இது ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 43-வது கூட்டம் ஆகும்.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் காணொளி காட்சி மூலம் நடத்தும் இந்த கூட்டத்தில், நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்குர், மாநில நிதி அமைச்சர்கள் கலந்து கொள்ள உள்ளனர். தமிழகத்தின் சார்பில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் முதல்முறையாக இந்த கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.

கொரோனா தடுப்பு மருந்துகள், தடுப்பூசி, மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றின் மீது விரிவிலக்கு வழங்குவது தொடர்பான கோரிக்கைகள் இன்று வைக்கப்படும் எனத் தெரிகிறது

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *