திருவிக நகரில் மதுபானம் பறிமுதல்.”ஓட்டேரி போலீஸ் பெண் சப் இன்ஸ்பெக்டர் மீது பெண்கள் தாக்குதல்”.!!!

சென்னை

வீட்டில் பதுக்கி மதுபானம் விற்றவரை மடக்கி பிடித்த போலீசார், அவரது வீட்டில் இருந்த மதுபானங்களை பறிமுதல் செய்ய சென்றபோது பெண்கள் சுற்றி வளைத்து தாக்கினர். இது தொடர்பாக 11 பேரை போலீசார் கைது செய்தனர்.

பெண் சப்-இன்ஸ்பெக்டரை மறித்து வாக்குவாதம் செய்த பெண்கள், சேகரை கைது செய்ய விடாமல் கைகலப்பில் ஈடுபட்ட காட்சி.
வீட்டில் பதுக்கி மதுபானம் விற்றவரை மடக்கி பிடித்த போலீசார், அவரது வீட்டில் இருந்த மதுபானங்களை பறிமுதல் செய்ய சென்றபோது பெண்கள் சுற்றி வளைத்து தாக்கினர். இது தொடர்பாக 11 பேரை போலீசார் கைது செய்தனர்.

திரு.வி.க. நகர்:
சென்னை ஓட்டேரி போலீஸ் பெண் சப்-இன்ஸ்பெக்டர் சஜீபா தலைமையிலான போலீசார், ஓட்டேரி பாலம் அருகே நேற்று முன்தினம் நள்ளிரவில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு பதற்றத்துடன் ஓடிவந்த சரவண பெருமாள் என்பவர், தன்னிடம் 500 ரூபாய் வாங்கிக்கொண்டு மதுபாட்டில் தருவதாக கூறிய மர்மநபர், மதுபாட்டில் தராமல் ஏமாற்றி என்னை அடித்து உதைத்து அனுப்பி விட்டதாக கூறினார்.

இதையடுத்து சட்டவிரோதமாக மதுபானம் விற்பவரை கையும், களவுமாக பிடிக்க முடிவு செய்த போலீசார், சரவண பெருமாளிடம் மீண்டும் அதே நபரிடம் கூடுதல் பணம் கொடுத்து மதுபானம் வாங்கும்படி கூறி அனுப்பினர்.

புரத்தில் சரவண பெருமாளிடம் மதுபானம் விற்க முயன்ற சேகர் என்பவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர். அதில் அவர், அதே பகுதியில் உள்ள தனது வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பது தெரிந்தது.
இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சஜீபா மற்றும் போலீஸ்காரர்கள் என 3 பேரும் சேகர் வீட்டில் பதுக்கிய மதுபாட்டில்களை பறிமுதல் செய்ய சென்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதியில் இதுபோல்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *