மூன்றே நாட்களில் மூன்று மில்லியனைத் தாண்டிய 96 பட டீஸர்!

வீடியோ

விஜய் சேதுபதி த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள 96 திரைப்படத்தின் டீஸர் வெளியான மூன்று நாட்களில் 3.3 மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுள்ளது. நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் சி. பிரேம் குமார் இயக்குனராக களமிறங்கும் திரைப்படம் 96. இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி ட்ராவல் புகைப்படக்கலைஞராக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார்.

நீண்ட நாட்களுக்கு பிறகு ஜனகாரஜ் இப்படத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் ஆடுகளம் முருகதாஸ், காளி வெங்கட் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த படத்தின் டீஸர் கடந்த ஜூலை 12 ஆம் தேதி வெளியிடப்பட்டது. விஜய் சேதுபதி மரக்கிளையில் தொங்கும் காட்சியோடு ஆரம்பமாகும் டீஸர் பயணங்களில் அவரின் குறும்புத்தனங்களை காட்சிபடுத்துகிறது. மில்லி மீட்டர் புன்னகையோடு த்ரிஷா கண்ணால் பேசுவது அற்புதமாக உள்ளது.

அதன்பிறகு இருவரும் உலாவும் காட்சிகள், மகிழ்ச்சி, ஆனந்தம் என அவர்களின் ரியாக்‌ஷன் எல்லாமே டிஸ்டிங்தன் வாங்குகின்றன. இவையெல்லாவற்றையும் சேர்த்து பின்னனி இசையில் கோவிந்த் மேனன் உயிரூட்டியிருக்கிறார். இவை எல்லாம் சேர்ந்து டீசருக்கு இந்த வெற்றியைத் தேடித்தந்திருக்கின்றன. 90 களில் நடக்கும் கதை என்பதால் 96 திரைப்பட பர்ஸ்ட் லுக் போஸ்டரிலேயே நுணுக்கமாக சில வேலைகளை செய்திருந்தார்கள் என்பதும் படத்தின் எதிர்பார்ப்புக்கு காரணமாகும். ரிலீஸ் தேதி விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *