பலவகைத் தொழில்நுட்பக் கல்லூரிகளில் இணையவழி மூலம் நடைபெற்ற தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.!!!

சென்னை

பலவகைத் தொழில்நுட்பக் கல்லூரிகளில் இணையவழி மூலம் நடைபெற்ற தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து உயர்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பில், உயர் கல்வித் துறை அமைச்சர் அறிவுரைப்படி பலவகைத் தொழில்நுட்பக் கல்லூரிகளில் ஆன்லைன் மூலமாக முதலாம், மூன்றாம், ஐந்தாம் மற்றும் ஏழாம் பருவம் பயின்ற மாணவர்களுக்கு நடைபெற்ற தேர்வு முடிவுகள் இன்று (31-5-2021) வெளியிடப்படுகிறது.

மேற்படி தேர்வுகள் கடந்த டிசம்பர் 2020, ஜனவரி 2021 மற்றும் பிப்ரவரி 2021 ஆகிய மாதங்களில் தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தால் நடத்தப்பட்டது. மொத்தம் 2,28,441 மாணவர்களில் 2,09,338 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்ச்சி விகிதம் 91.63 சதவீதமாகும். 18,529 மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை. மேலும், 574 மாணவர்களின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தேர்வு முடிவுகளை www.tndte.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேற்படி தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் ஜூன் மற்றும் ஜூலை மாதம் நடைபெறும் அரியர் தேர்வுகளில் கலந்து கொண்டு தேர்வெழுதலாம். இதற்கான தேர்வு கட்டணத்தை 04-06-2021 முதல் 10-06-2021 வரை செலுத்தலாம்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *