கருப்புப் பூஞ்சையால் பாதிக்கப்பட்ட நோயாளி.!!!

தமிழகம் மருத்துவம்

கருப்புப் பூஞ்சைத் தொற்றுக்குப் பயன்படுத்தப்படும் ஆம்போடெரிசின்-பி மருந்தை தமிழகத்துக்குக் கூடுதலாக வழங்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

கரோனாவைத் தொடர்ந்து, கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் கருப்புப் பூஞ்சைத் தொற்று அடுத்த அச்சுறுத்தலாக உள்ளது. இதற்குப் பயன்படுத்தப்படும் ஆம்போடெரிசின்-பி மருந்துக்கும் தட்டுப்பாடுகள் நிலவி வருகிறது.

இந்த நிலையில், தமிழகத்துக்குக் கூடுதலாக ஆம்போடெரிசின்-பி மருந்தை ஒதுக்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் தடுப்பூசி, ரெம்டெசிவர் மருந்து மற்றும் ஆக்சிஜன் விநியோகம் உள்ளிட்டவற்றை தமிழகத்துக்குக் கூடுதலாக வழங்கியதற்கு தனது நன்றியையும் பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *