தில்லியில் கரோனா தொற்று  ஏற்பட்டு சிகிச்சையாளர் உயிரிழந்தார்.!!!

மருத்துவம்

தில்லியில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த டாக்டர் அனஸ் தொற்று  ஏற்பட்டு உயிரிழந்தார். 26 வயதே ஆன இளம் மருத்துவர் மரணம் அடைந்த சம்பவம் அந்த வட்டாரத்தில் மக்களிடம் சோகத்தை ஏற்படுத்தியது. கரோனா சிகிச்சை அளிக்கும் பணியில் டாக்டர் இறந்தால் அவரது குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் உதவி வழங்கப்படும் என தில்லி அரசு அறிவித்தது.  அதன்படி, டாக்டர் அனஸின் வீட்டுக்கு சென்ற தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் ஆறுதல் கூறி, ஒரு கோடி ரூபாய் செக் வழங்கினார். டாக்டரின் தந்தை முஜாஹித் இஸ்லாம் அதை வாங்க மறுத்து விட்டார். அவரும் ஒரு மருத்துவர்.

”நாட்டுக்காக சேவை செய்து மரணம் அடைந்து இருக்கிறான் என் மகன். கடமையை செய்த அவனுடைய உயிருக்கு இழப்பீடு வாங்க என்னால் முடியாது. இந்த பணத்தை நான் வாங்கமாட்டேன்” என முதல்வரின் முகத்துக்கு நேராக கம்பீரமாக சொன்னார் அந்த தந்தை. அங்கே இருந்த முதல்வரும் கூட இருந்தவர்களும் பேச்சிழந்து நின்றனர். அந்த டாக்டர் (பெரியவர்) அதோடு நிற்கவில்லை. எனக்கு இன்னும் இரண்டு மகன்களும் ஒரு மகளும் இருக்கிறார்கள்.

அவர்களையும் நாட்டு  மக்களுக்கு சேவை செய்யவே தயார் படுத்தி வருகிறேன். இதைவிட எனக்கு எந்த பெருமையும் தேவையில்லை “என்று முஜாஹித் இஸ்லாம் சொன்னார். ஒரு மகத்தான இந்தியனை சந்தித்ததில் மகிழ்ச்சி என நெகிழ்ச்சியுடன் கூறிவிட்டு திரும்பினார் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *