“பள்ளி குழந்தைகளுக்கான தடுப்பூசியில், 4 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி.!!!

மருத்துவம்

சிங்கப்பூரில், தற்போதைய நிலவரப்படி 45 வயதுக்கு மேற்பட்ட மருத்துவப் பணியாளர்களுக்கு, அவர்களின் முதல் டோஸ் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. ஊரடங்கு அமலில் இருப்பதனால், ஆகஸ்ட் இறுதிக்குள் அனைத்து வயதினருக்கும் தடுப்பூசி விநியோகிக்கப்படும் எனக்கூறப்பட்டுள்ளது. 40 – 44 வயதினருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

மட்டுமன்றி 60 வயதுக்கு மேற்பட்டோரில், மூன்றில் ஒருபங்கினருக்கு ஏற்கெனவே தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அவர்களில் சிலர் இப்போதைக்கு முன்பதிவு செய்துள்ளனர் என்றும், விரைவில் அவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டுவிடும் என்றும் கூறியுள்ளார் அவர்.

இதைத்தொடர்ந்து இன்று பேசியிருக்கும் அந்நாட்டு பிரதமர் லீ, மாணவர்களுக்கான தடுப்பூசி விநியோகம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதில் “சிங்கப்பூரில், 40 தடுப்பூசி மையங்கள் தற்போது செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. தடுப்பூசிகளும், கொரோனா கட்டுப்பாட்டுகளுக்கு மத்தியில் விநியோகிக்கப்பட்டு வருகிறது. அவற்றை மேற்கொண்டு வேகப்படுத்தும் முயற்சியிலும் இறங்கியுள்ளோம். குழந்தைகளுக்கு தடுப்பூசி கொடுத்த பிறகு, ஜூன் மாத பிற்பகுதியிலிருந்து 39 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்படும். அவர்கள்தான் சிங்கப்பூரில் அதிகம் என்பதால், அவர்களை இரு வாரங்கள் முன்னுரிமை தர திட்டமிட்டுள்ளோம். அதன்பிறகு அவை விநியோகிக்கப்படும்.

தற்போதுவரை, நாட்டில் 37 சதவிகிதம் பேருக்கு, ஒரு டோஸ் தடுப்பூசியாவது போடப்பட்டுள்ளது. விரைவில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்படும். மூன்றில் இரு பங்கினருக்காவது, ஜூலைக்குள் தடுப்பூசி போடப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படுகிறோம்” எனக்கூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *