செய்யாறு பிரபல முத்த வழக்கறிஞர்-கொடைவள்ளல் விஸ்டம் கல்விக் குழுமங்களின் நிறுவனருமான டி.ஜி.மணி உடல்நலக் குறைவால் காலமானார்.!!

சென்னை தமிழகம்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியை சேர்ந்தவர் பிரபல முத்த வழக்கறிஞர் டி.ஜி.மணி உடல்நலக்குறைவால் காலமானார்.இவர் செய்யாறில் உள்ள விஸ்டம் கல்விக் குழுமங்களின் நிறுவனர்.இவர் சென்னை உயர் நீதிமன்றத்திலு பல வழக்குகளை நடத்தியுள்ளார்.இவர் உதவும் கரங்கள் பல தன்னார்வல அமைப்புகளுக்கும் பொருளாதார உதவியும் பெரியாறு, காஞ்சிபுரம்,வந்தவாசி சுற்றுப்புற வட்டாரங்களில் பல நற்பணிகளைச் செய்துள்ளார்.தற்போதைய கொரோனா காலகட்டத்தில் பல மருத்துவ முகாம் நலத்திட்ட உதவிகளையும் செய்திருந்தார்.இவர் வழக்கறிஞராக பணியாற்றிய 99 சதவீத வழக்குகளில் இவர் வெற்றி பெற்றுள்ளார்.பல ஏழைகளுக்கு இலவச சட்ட உதவி களையும் செய்துள்ளார் குறிப்பாக குடும்ப நல வழக்கு களில் விவாகரத்து ஏற்படாதவாறு குடும்பங்களில் பேசி பல குடும்பங்களை பிரியாமல் ஒன்றிணைந்து வாழ வழி வகுத்தவர்.இவரது திடீர் மறைவு செய்யாறு சுற்றுவட்டார பகுதியில் வசிக்கும் பொதுமக்கள்மற்றும் அவரது நிறுவன ஊழியர்களும் பேரதிர்ச்சி அடைந்தனர்.நேற்று மாலை அவரது உடல் செய்யாறு பகுதியில் அடக்கம் செய்யப்பட்டபோது நூற்றுக்கணக்கான பொதுமக்கள் அவரது உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *