முன்கள பணியாளர்களாக பணியாற்ற தன்னார்வத்தோடு 30 ஆசிரியர்கள் மட்டுமே ஆர்வம் காட்டியுள்ளனர்.!!

தமிழகம் மருத்துவம்

மதுரையில்
கொரோனா பேரிடரில் தன்னார்வலர்களா33 ஆசிரியர்கள்:

மதுரை மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் இருந்தும் , கொரோனா பேரிடரில் தன்னார்வ லர்களாக பணியாற்ற 33 ஆசிரியர்கள் மட்டும் முன் வந்து பணியாற்று கின்றனர் .

கொரோனா தொற் றால் , தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப் பட்டுள்ளது .

இது பேரிடராக அறிவிக்கப்பட்டுள்ள தால் , இந்த காலக்கட்டத்தில் , கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன் சிலிண்டர் ; மருந்து , மாத்திரை தேவைப் படுவோருக்கு மருத்துவ வசதிக்கும் , உணவு முறை பழக்கம் குறித்து நோயாளிகளுக்கு விளக்கி கூறுவதற்காக ” வார் ரூம் ” திறக்கப்பட்டுள்ளது . மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், வார் ரூம் மையம் திறக்கப்பட்டுள்ளது . இந்த வார் ரூமில் கொரோனா பேரிடரில் தன்னார்வ லர்களாக பணியாற்ற விருப்பமுள்ள ஆசிரியர்களுக்கு அழைப்பு விடுக்கப் பட்டது .

கொரோனா தொற்றுக்கு நூற்றுக்கணக் கானோர் தினமும் பாதிக்கப் பட்டுள்ளனர் . ஆயிரக்கணக் கானோர் வீடுகளில் தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெறுகின்றனர் . அவர்களுக்கு, மருத்துவ வழிகாட் டுதல் மற்றும் கவுன்சிலிங் அளிக்கும் வகையில் தன்னார்வலராக பணியாற்ற ஆசிரியர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்தது . மதுரை மாவட்டத் தில் , தற்போது வரை 33 ஆசிரிய , ஆசிரியைகள் மட்டுமே முன்வந்து இப்பணியில் சேர்ந்துள்ளனர் . இவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கொரோனா வார் ரூமில் செவிலியர்கள டன் இணைந்து தொலை பேசி மூலம் கொரோனா நோயாளிகளுக்கு தேவையான கவுன்சிலிங் அளிக் கின்றனர் .

இவர்கள் சுழற்சி (ஷிப்ட்) முறையில் பணியாற்றி வரு கின்றனர் . மாவட்டத்தில் , 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றுகின் றனர் . அதில் , இரட்டை இலக்க எண்ணிக்கையில் 33 ஆசிரியர்கள் மட்டுமே தன்னார் வலர்களாக பணியாற்ற ஆர்வத்துடன் முன் வந்துள்ளனர் . இது குறித்து , தன்னார்வலர் ஆசிரியர்கள் கூறுகையில் , ‘ முதலில் எங்களுக்கு அழைப்பு விடுத்த போது கொரோனா தொற்று பாதிக்கப் படுவோமோ என்ற பய உணர்வு இருந்தது . பொது மக்கள் படும் அவதியை பார்க்கும் போது , இந்த பேரிடரில் நம்மால் முடிந்த உதவியை செய்யலாம் என முடிவு செய்து பணி யாற்ற முன் வந்தோம் . முதலில் பாதித்த பகுதிகளுக்கு நேரில் சென்று கணக் கெடுக்க வேண்டும் என கூறினர் . அதில் போதிய பாதுகாப்பு இல்லை என உணர்ந்ததால் மாற்றுப் பணி கேட்டோம் . இதனைத் தொடர்ந்து , நோயாளிகளுக்கு கவுன்சிலிங் – கொடுக்க முடியுமா ?என கேட்டனர் . அதனை ஏற்று , கவுன்சிலிங் , தொலைபேசி மூலம் இரவு ,பகல் என பணியாற்றி வருகிறோம் . இத்துடன் பிற பணிகளிலும் பணியாற்ற தயாராக உள்ளோம் ‘ என்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *