கலைஞர் பிறந்த நாளான இன்று முதல்வர் உத்தரவுவின் படி திருவல்லிக்கேணி 119வது வட்டத்தில் தடுப்பூசி முகாம் மற்றும் நலத்திட்ட உதவி நிகழ்ச்சி நடந்தது.!!

தமிழகம்

திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்ரவின்படி சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் திருவல்லிக்கேணி பகுதி 119 வது வட்டத்தில் கொரோனா தடுப்பு முகாமை ஆய்வு செய்து மற்றும் அனைவரும் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளுமாறு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து அரிசி,மளிகைப் பொருட்கள் அடங்கிய நிவாரண பொருட்கள் மற்றும் இன்று கலைஞர் பிறந்தநாளான இன்று பிரியாணி பொட்டலங்களையும் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில்சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் நே.சிற்றரசு அவர்கள் மற்றும் திருவல்லிக்கேணி பகுதி செயலாளர் ஏ.ஆர்.பி.எம்.காமராஜ் அவர்கள் மற்றும் அவைத்தலைவர் கா.வே.செழியன், வி.பி.பொன்னரசு, R.N.துரை ,S.சசிகுமார்,M.K.ஆனந்த்,.பிரகாஷ் மற்றும் ரவி ராஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சி ஏற்பாட்டினை திருவல்லிக்கேணி 119வது வட்ட செயலாளார்
க.வே.மோகன் செய்திருந்தார்.இந்நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் அமர்ந்திருந்து தடுப்பூசி போட்டுக் கொண்டு நலத்திட்ட உதவிகளையும் பெற்றுச் சென்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *