இந்திய பிரதமர் மோடியின் 7 ஆண்டுகால சாதனையை மக்களுக்கு எடுத்து சொல்லும் நிகழ்ச்சியில் கொரோனோ தொற்று பாதுகாப்பு பணியில் ஈடுபடும் முன் களப் பணியாளர்களுக்கு பா.ஜ.க மீனவர் பிரிவு சார்பில் மீன் மற்றும் பிரியாணி பொட்டலங்கள் வழங்கப்பட்டன.!!

சென்னை தமிழகம்

இந்திய பிரதமர் மோடியின் 7 ஆண்டுகால சாதனையை மக்களுக்கு எடுத்து சொல்லும் நிகழ்ச்சியில் கொரோனோ தொற்று பாதுகாப்பு பணியில் ஈடுபடும் முன் களப் பணியாளர்களுக்கு பா.ஜ.க மீனவர் பிரிவு சார்பில் மீன் மற்றும் பிரியாணி பொட்டலங்கள் வழங்கப்பட்டன.!!

இந்திய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 7 ஆண்டு கால சாதனையை மக்களுக்கு எடுத்து செல்லும் வகையில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில மீனவர் பிரிவின் சார்பாக கொரானாநோய் பாதுகாப்பு பணியில் அல்லும் பகலும் அயராது பாடுபட்டு உழைத்து கொண்டிருக்கும் காவல்துறையை சேர்ந்த நண்பர்களுக்கும் சென்னை நகரை சுத்தமாக வைத்துக் கொண்டிருக்கும் சுகாதாரப் பணியாளர்களுக்கும் இன்று பாரதிய ஜனதா கட்சியின் ஆற்றல்மிகு தலைவர் டாக்டர் எல்.

முருகன் மாநில அமைப்பு பொது செயலாளர் கேசவ விநாயகம் அவர்களின் ஆணைக்கிணங்க மாநிலமீனவர் பிரிவின் சார்பாக கொட்டிவாக்கம் முதல் செம்மஞ்சேரி காவல்துறை உட்பட்ட பகுதி வரை பணிபுரியும் களப் பணியாளர்களுக்கு இன்று மதியம் அறுசுவை உணவாக சிக்கன் பிரியாணி வெங்காய பச்சடி வஞ்சிரம் மீன் வறுவல் போன்ற உணவுகளை மாநில மீனவர் பிரிவின் தலைவர் டாக்டர் எஸ் சதீஷ்குமார் அவர்கள் தலைமையில் மாநில மீனவர் பிரிவு துணைத் தலைவர் கொட்டிவாக்கம் கே எஸ் மோகன் மாநில மீனவர் பிரிவுச் செயலாளர் ஈசிஆர் டாக்டர் கமலக்கண்ணன் அவர்கள் ஏற்பாட்டில் வழங்கப்பட்டது.இதில் மாநில மீனவர் பிரிவு செயலாளர் ஆ. சௌந்தர் மத்திய சென்னை மாவட்ட மீனவர் பிரிவுதுனை தலைவர் பிரான்சிஸ் கிழக்கு சென்னை நிர்வாகி மோதீஸ்வரன் மற்றும் மாநில மாவட்ட மீனவர் பிரிவு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *