தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் வண்டலூர் மிருக காட்சி சாலையில் கொரோனோ பாதிக்கப்பட்ட சிங்கங்களுக்கு கொடுக்கப்படும் சிகிச்சையை நேரில் சென்று ஆய்வு செய்தார்.!!

தமிழகம் மருத்துவம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு நேரில் சென்று, கோவிட் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள ஆசிய சிங்கங்களை பார்வையிட்டு, அச்சிங்கங்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து
மருத்துவர்கள் மற்றும் வனத்துறை உயர் அலுவலர்களிடம் கேட்டறிந்தார்கள்.

இந்நிகழ்வின்போது, மாண்புமிகு ஊரக தொழிற் துறை அமைச்சர் திரு. தா.மோ. அன்பரசன், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலாளர் திருமதி சுப்ரியா சாஹு, இ.ஆ.ப., நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஜி. செல்வம், சட்டமன்ற உறுப்பினர் திருமதி எம். வரலட்சுமி மதுசூதனன் ஆகியோர் உடனிருந்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *