வங்கிப் பரிவர்த்தனைகள் ஏற்கனவே அறிவித்ததுபோல பகல் 2 மணி வரை மட்டும் நடைபெறும்.!!!

தமிழகம்

தமிழகத்தில் ஊரடங்கை சில தளர்வுகளுடன் வருகிற 14-ந் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து வங்கி வேலை நேரத்தையும் வருகிற 13-ந் தேதி வரை குறைத்து தமிழ்நாடு வங்கியாளர்கள் குழுமம் அறிவித்துள்ளது.

அதன்படி வங்கி கிளைகள், காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை செயல்படும். வங்கிப் பரிவர்த்தனைகள், ஏற்கனவே அறிவித்ததுபோல பகல் 2 மணி வரை மட்டும் நடைபெறும். மண்டல அலுவலகங்கள், நிர்வாக அலுவலகங்கள் வழக்கம்போல, மாலை 5 மணி வரை செயல்படும். கிளைகளில் மூன்றில் ஒரு பங்கு ஊழியர்கள், மாற்று முறையில் செயல்பட வேண்டும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *