இன்று பதிமூன்று பேர் கொண்ட நிபுணர் குழு கருப்பு பூஞ்சை நோய்த் தொற்றைத் தடுக்க அமைக்கப்பட்டது.!!!

தமிழகம் மருத்துவம்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் உடலில் உள்ள நோய் எதிர்ப்பாற்றலே சில நேரங்களில் எதிர்வினையாற்றக் கூடிய நிலை ஏற்படும். இதனால், அவர்கள் தீவிரசிகிச்சைக்குள்ளாக வேண்டிய நிலை ஏற்படுகிறது. அந்த சமயத்தில், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஸ்டீராய்டு போன்ற நோய் எதிர்ப்பாற்றலைக் குறைக்கும் மருந்துகள் வழங்கப்படும்.

தமிழகத்தில் 921 பேர் கருப்பு பூஞ்சை நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், அதில் 95 சதவீதத்துக்கும் அதிகமானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவர்களில் பெரும்பாலானோர் குணமடைந்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, கருப்பு பூஞ்சை சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் 2,470 ஆம்போடெரிசின் மருந்துகளை இதுவரை மத்திய அரசு தமிழகத்துக்கு ஒதுக்கியுள்ளதாகத் தெரிகிறது. இதைத் தவிர அவற்றை கூடுதலாக கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *