இனிமேல் வருமானவரி கணக்கை இணையதள வழியில் தாக்கல் செய்வதற்கான புதிய வலைத்தளம் இன்று முதல் பயன்பாட்டுக்கு வருகிறது.!!!

சென்னை

வருமான வரி கணக்கை இணைய வழியில் தாக்கல் செய்வதற்கான புதிய வலைதளம் (www.incometax.gov.in) திங்கள்கிழமை (ஜூன் 7) முதல் பயன்பாட்டுக்கு வருகிறது. வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்வதற்கான படிவங்கள்-1, 2 ஆகியவற்றைப் பூா்த்தி செய்வதற்கான மென்பொருள் இலவசமாக வழங்கப்படும் என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.அந்த மென்பொருளில் படிவங்களைப் பூா்த்தி செய்வதற்கான வழிமுறைகளும் இடம்பெற்றிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருமான வரி கணக்குத் தாக்கல் படிவங்கள்-3,4,5,6,7 ஆகியவற்றைப் பூா்த்தி செய்வதற்கு உதவும் மென்பொருள்களை உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய வலைதளத்தின் வாயிலாக வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்வதற்கான விரிவான வழிமுறைகளும் இடம்பெற்றுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி கணக்குகளின் விவரங்களை புதிய வலைதளத்தின் வாயிலாக பயனாளா்கள் அறிந்து கொள்ள முடியும். வருமான வரி கணக்கு படிவத்தில் பூா்த்தி செய்யப்பட வேண்டிய விவரங்களை வலைதளத்தில் முன்கூட்டியே சேமித்து வைக்கும் வசதியும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *