ஆர்.கே.நகரில் இன்று டி.டி.வி தினகரனுக்கு எதிரான போராட்டம்.!

சென்னை

சென்னை ஜீலை 18
டி.டி.வி.தினகரன் ஆர்.கே. நகர் தொகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. இதற்காக தண்டையார்பேட்டையில் உள்ள எம்எல்ஏ அலுவலகத்தில் விழாவிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுருந்தது ஆனால், டிடிவி தினகரன் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 20 ரூபாய் நோட்டுக்களை காட்டி முழக்கமிட்டனர். டிடிவி ஆதரவாளர்களின் வாகனங்கள் மீது சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதனை அடுத்து இரு தரப்பினரும் அங்கு திரண்டதால், திடீர் பரபரப்பும் ஏற்பட்டது. இதையடுத்து துணை ஆணையர் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். கல்வீசி தாக்கியதில் ஒரு பெண் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட சிலர் காயமடைந்தனர் இதனையடுத்து போலீசார் தடியடி நடத்தி எதிர்ப்பாளர்களை கலைத்தனர். எம்எல்ஏ அலுவலகம் அமைந்துள்ள சாலை முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. பயனாளிகள் தவிர மற்ற யாரும் அந்த வழியாக அனுமதிக்கப்படவில்லை. அதன்பின்னர் எம்எல்ஏ தினகரன், ஏராளமான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *