மலேசியாவை சேர்ந்த பாடகி அஞ்சலி கதிரவன் விரைவில் புதிய இசைக் குறுவட்டு வெளியிடுகிறர்.!!

சென்னை

 

மலேசியாவை சேர்ந்த பாடகி அஞ்சலி கதிரவன் விரைவில் புதிய இசைக் குறுவட்டு வெளியிடுகிறர்.!!

 

மலேசியாவில் சிலாங்கூர் மாநிலத்தில் ஓர் இசைக் குடும்பத்தை சார்ந்த அஞ்சலி கதிரவன் தமிழ் இசை பாடல்களை பாடிவருகிறார். இவர் தமிழ்நாட்டில் உள்ள பாரம்பரிய இசைக் கல்லூரி சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் 5 ஆண்டுகள் முறையான இசைப் பயிற்சி பெற்றவர். அண்ணாமலை பல்கலைகழத்தில் வாய்பாட்டு-நாதஸ்வரம் உள்பட பல இசைகருவிகளை வாசிக்கவும் பயிற்சி எடுத்துள்ளார். இவரது 9 வயதில் முதன்முதலாக “மலை காற்று வந்து தமிழ்பேசுதே” என்ற பாடலை தனது தந்தை கதிரவன் அவர்களுடன் இணைந்து பாடியுள்ளார்.

இவரது தந்தை கதிரவன் மலேசியாவில் உள்ள உதய கானம் இசைக்குழுவில் பாடிவருகிறார்..அஞ்சலி கதிரவன் மலேசியாவில் பல்வேறு மேடை நிகழ்ச்சிகளில் பாடியுள்ளார். இவர் அண்ணாமலை பல்கலைகழத்தில் இசைப் பயிலும் நேரத்தில் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மேடை கச்சேரிகளில் பாடி உள்ளார். சென்னை புத்தகக் கண்காட்சியில் நடந்த நிகழ்ச்சியில் இவர் பாடிய தமிழ் வாழ்த்துப் பாடலை பாராட்டி எழுச்சி கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள் இவருக்கு பொன்ணாடை போர்த்தி பாராட்டிள்ளார்.மற்றும் இவர் சமீபத்தில் பாடிய இளையராஜா இசை அமைப்பில் வெளிவந்த ரோசாப்பூ ரவிக்கைகாரி படத்தில் வெளி வந்த என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம் என்ற பாடல் சமூக வளைதளங்களில் அதிக வரவேற்பு வந்து கொண்டிருக்கிறது.. ஆயிரக் கணக்கானோர் ஆதரவு தெரிவித்துள்ளனர், அஞ்சலி கதிரவன் மலேசியாவின் வானொலி மின்னல் பண்பலையில் கதைப்போமா என்ற நிகழ்ச்சியில் கூட நேரலையில் நாதஸ்வரம் வாசித்துள்ளார்.இவர் தற்போது மலேசியாவில் நடைபெறும் திருமணம் மற்றும் மங்கல நிகழ்வுகளுக்கு பாடல்கள் பாடியும் நாதஸ்வரம் இசைத்தும், இவரது சகோதரர் முகிலன் கதிரவனுடன் இணைந்தும் நிகழ்ச்சி நடத்தி வருகிறார்.இவர் தற்போது இவர் வசிக்கும் பகுதியில் அகரம் இசை பயிற்சி மையம் நடத்தி வருகிறார். இந்த அகரம் இசை பயிற்சி மையத்தில் ஏராளமான மாணவ-மாணவிகள் பள்ளி குழந்தைகள் இவரிடம் இசை பயின்று வருகிறார்கள். இவரது இசை பள்ளியின் தொடர்புக்கு 0164254550 மின்னஞ்சல் anjalikathirawanofficial07@gmial.com.
youtube: Anjali Kathirawan Official

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *