கொரோனா நோய்த் தொற்றினால் பெற்றோர்களை இழந்து ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 5 லட்ச ரூபாய் வைப்பீடு பத்திரம் வழங்கினார்.!!

தமிழகம்

 

கொரோனா நோய்த் தொற்றினால் பெற்றோர்களை இழந்து ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (16.6.2021) தலைமைச் செயலகத்தில், அவர்களது பெயரில் தலா 5 இலட்சம் ரூபாய் வைப்பீடு செய்து,
அக்குழந்தை 18 வயது நிறைவடையும் போது, அந்தத் தொகையை அக்குழந்தைக்கு வட்டியோடு வழங்கும் வகையில் 5 குழந்தைகளுக்கு
அவர்களது பெயரில் தலா 5 இலட்சம் ரூபாய் தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் வைப்பீடு
செய்தமைக்கான சான்றிதழ்களை, அக்குழந்தைகளின் பாதுகாவலர்களிடம் வழங்கினார்கள். இந்நிகழ்வின்போது, மாண்புமிகு சமூக நலன்
மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் திருமதி பி. கீதா ஜீவன், சட்டமன்ற உறுப்பினர் திரு. உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர்
மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *