கொரோனா பேரிடர் காலத்தை கருத்தில் கொண்டு அனைத்து வழிபாட்டுதலங்களிலும் மின்கட்டணத்தை ரத்து செய்ய தமிழ்நாடு முஸ்லிம் லீக் அரசுக்கு வேண்டுகோள்.!!

சென்னை

கொரோனா பேரிடர் காலத்தை கருத்தில் கொண்டு அனைத்து வழிபாட்டுதலங்களிலும் மின்கட்டணத்தை
ரத்து செய்வதோடு, இலவச மின்சாரம் வழங்குக
அரசுக்கு தமிழ்நாடு முஸ்லிம் லீக் வலியுறுத்தல்.!!

தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வெளியிட்டுள்ள அறிக்கையில்
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காட்டுத்தீ போல மிகவும் வேகமாக பரவி வருகிறது. கொரோனாவை தடுக்க அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் இரவு ஊரடங்கு வார இறுதி நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருந்த போதிலும் கொரோனா தொற்று குறையாமல் நாளொன்று 35 ஆயிரம் வரை பாதிக்கப்பட்டனர்.
கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியதால், ஏப்ரல் 26-ம் தேதி முதல் தமிழகத்தில் அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டுள்ளது. கொரோனா தொற்றத்தை குறைக்க தமிழக அரசு மேற்கொண்ட கடுமையான நடவடிக்கையின் காரணமாக, தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் 10 ஆயிரத்திற்கும் கீழ் குறையாக தொடங்கியுள்ளது.
சென்னை உள்பட 27 மாவட்டங்களில் கொரோனா தொற்று குறைந்து விட்ட காரணத்தால், பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவை ஜூன் 14-ம் தேதி முதல் தமிழக அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்துள்ள மாவட்டங்களில் அனைத்து வழிபாட்டு தலங்களையும் திறக்க வேண்டுமென தமிழ் நாடு முஸ்லிம் லீக் தமிழக அரசை ஏற்கனவே வலியுறுத்தியுள்ள நிலையில், டாஸ்மாக் கடைகளை திறந்துவிட்டு, வழிபாட்டு தலங்களை திறக்காமல் தமிழக அரசு தொடர்ந்து காலதாழ்த்தி வருகிறது.
மனித வாழ்வில் திருமணம் என்பது ஒரு முறை நடைபெறும் நிகழ்வாகும். தற்போது கோயில்கள் மூடப்பட்டுள்ளதால் ஏராளமான திருமணங்கள் கோயில் வாசலிலே நடைபெறுகின்ற அவல நிலை உள்ளது. தங்களது குழந்தைகளுக்கு சிறப்பாக திருமணம் செய்ய வேண்டும் என நினைத்து கொண்டிருக்கும் பெற்றோர்களுக்கு இந்த நிகழ்வு பெரும் மனவேதனை அமைந்துள்ளது.
ஊரடங்கு காரணத்தால் வீட்டிலேயே முடங்கியிருக்கும் பொதுமக்களின் மனவேதனை போக்க அனைத்து வழிப்பாட்டு தலங்களை உடனடியாக திறக்க தமிழக அரசு உத்தரவிட வேண்டும். அதுமட்டுமின்றி ஏப் 26-ம் தேதி முதல் தமிழகத்தில் அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டுள்ளதால், வருமானமின்றி வழிபாட்டு தலங்கள் கடும் நிதி நெருக்கடி சந்தித்து வருகின்றன.
பொதுமக்கள் மற்றும் சில வசதி படைத்தவர்கள் தரும் நன்கொடைகளை கொண்டு தமிழகத்தில் அனைத்து வழிபாட்டு தலங்கள் சொந்த செலவுகளை செய்து வருகின்றன. இதில் சில வழிபாட்டு தலங்கள் மிகவும் குறைந்தளவு வருமானத்தால், செலவுகளை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது. இந்நிலையில், ஊரடங்கு உத்தரவால் அனைத்து வழிபாட்டு தலங்களும் கடந்த சில மாதங்களாக மூடப்பட்டிருக்கிறது.
இதனால் வருமான் இன்றி தவித்து வரும் வழிபாட்டு தலங்களுக்கு மின் கட்டணம் பெரும் செலவை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே வருமானின்றி தவித்து வழிபாட்டு தலங்கள் மின்கட்டணம் செலுத்த கூட பணம் இல்லாமல் தவித்து வருவதால், தமிழகம் முழுவதும் உள்ள வழிபாட்டு தலங்களின் மின் கட்டணத்தை தமிழக அரசு ரத்து செய்வதோடு, வழிபாட்டு தலங்களுக்கு இலவச மின்சாரம் அளிக்க தமிழக அரசு முன்வர வேண்டுமென தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என அறிக்கை விடுத்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *