ஒலிம்பிக் ஓட்ட பந்தய வீரர் உசேன் போல்ட் தந்தையர் தினத்தில் வெளியிட்ட படம்.!!

சென்னை

ஜமைக்கா நாட்டைச் சேர்ந்த 34 வயதான உசைன் போல்ட், 2008, 2012 மற்றும் 2016 ஒலிம்பிக்கில் 8 தங்க பதக்கங்களை வென்றுள்ளார். உலகின் அதிவேக மனிதர் என்று எல்லோராலும் அழைக்கப்படுபவர். ஒலிம்பிக் பதக்கம் உட்பட தனது விளையாட்டு கெரியரில் 23 தங்கத்தை தட்டி தூக்கியுள்ளார் போல்ட்.

இந்நிலையில், தந்தையர் தினமான நேற்று தனது குடும்பத்தின் புகைப்படத்தை அவர் பகிர்ந்திருந்தார். அதில் அவரது மனைவி கேசி பென்னட் மற்றும் மூத்த மகள் ஒலிம்பியா லைட்னிங் உள்ளனர். அவர்களுடன் இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளனர். அதில் ஒரு குழந்தையின் பெயர் செயிண்ட் லியோ போல்ட். மற்றொரு குழந்தையின் பெயர் தண்டர் போல்ட். இருப்பினும் இந்த குழந்தைகள் எப்போது பிறந்தன என்பதை போல்ட் தெரிவிக்கலை.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *