கவியரசு கண்ணதாசன் 95வது பிறந்தநாள் விழா அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை.!!

தமிழகம்

சென்னை தியாகராய நகரில் கவியரசு கண்ணதாசன் அவர்களின் 95-வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் சார்பில் அவரது திருவுருவச் சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்குதொழில் துறை அமைச்சர்
தங்கம் தென்னரசு,சட்டத் துறை அமைச்சர் எஸ். இரகுபதி, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர்
கே.ஆர். பெரியகருப்பன், செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன்,மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை
அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, ஆதிதிராவிடர்
நலத் துறை அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ், நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர்கள்
ஜெ. கருணாநிதி,தா. வேலு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் மகேசன் காசிராஜன், இ.ஆ.ப.,
செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், இ.ஆ.ப., மற்றும் கவியரசு கண்ணதாசன் குடும்பத்தினர் ஆகியோர் மலர் தூவி
மரியாதை செலுத்தினார்கள். இந்நிகழ்ச்சியில் திரளான கவிஞர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *