மயிலாப்பூர் ஆதிகேசவப்பெருமாள் திருக்கோயிலை சீரமைக்க அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு உத்தரவு திருக்கோயில் அர்ச்சகர்கள் குறைகளையும் கேட்டறிந்தார்.!!

சென்னை

சென்னை மயிலாப்பூரில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ஆதிகேசவப் பெருமாள்- பேயாழ்வார் திருக்கோவிலில் நேற்று இரவு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
கோயில் பிரகாரங்கள் மற்றும் அங்குள்ள திருத்தேர்களை ஆய்வு செய்த அமைச்சர் அவர்கள் கோவில் அர்ச்சகர்களிடம் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் எவ்வாறு உள்ளது என்பது குறித்து கேட்டறிந்தார் . அப்போது அங்கிருந்த கோவில் அர்ச்சகர்கள் அமைச்சர் அவர்களிடம் கோவில் குடமுழுக்கு மற்றும் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அளித்தனர் . அதனைப் பெற்றுக் கொண்ட அமைச்சர்
பி.கே.சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது ..
இன்று மிக மகிழ்ச்சியான நாள். திமு கழகம் ஆட்சி பொறுப்பேற்று 100வது நாளை நிறைவு செய்யும் நாள். இந்நாளில் தமிழக முதல்வர் அவர்கள் இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தமிழகம் முழுவதும் உள்ள திருக்கோவில்களில் உள்ள காலிப் பணியிடங்களில் பணியாற்ற 216 பேருக்கு பணி ஆணை வழங்கி வழங்கினார். அதுமட்டுமல்லாமல் திருக்கோவிலில் பணியாற்றி மறைவுற்றவர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கும் ஆணையினையும் , திருக்கோயில்களில் பணியாற்றி இறந்தவர்கள் குடும்பங்களுக்கு ஓய்வூதிய பலன்களையும் வழங்கியும் சிறப்பித்தார்கள் . மிகவும் சிறப்புக்குரிய நூறாவது நாளில் நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பித்த தமிழக முதல்வர் அவர்களுக்கு அறநிலையத்துறை சார்பில் எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் .

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள. இத்திருக்கோயில்
சுமார் 5 ஆயிரம் ஆண்டு பழமையான, புராதன வரலாறுகளை உள்ளடக்கியது. இத்திருக்கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று முடிந்து 12 ஆண்டுகள் நிறைவுற்றும் , குடமுழுக்கிற்கான பணிகள் இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது . இதுகுறித்து இந்து சமய அறநிலைத் துறை அதிகாரியிடம் கலந்தாலோசித்து இத்திருக்கோயிலை சீரமைத்து ஆகம விதிகளின்படி குடமுழுக்கிற்க்கு எடுத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படும் . மேலும் இங்கு பணியாற்றும் அர்ச்சகர்கள் வைத்த கோரிக்கைகள் குறித்து உரிய முறையில் பரிசீலிக்கப்படும் இவ்வாறு அவர் கூறினார் .
இந்த ஆய்வு பணியின்போது இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் ஐ.ஏ.எஸ், மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் மயிலை
த.வேலு , இந்து சமய அறநிலையத் துறை துணை ஆணையர் ரேணுகா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர் .

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *