மறைந்த பத்திரிக்கையாளர் பெரியவர் சுந்தரமூர்த்தி குடும்பத்திற்கு உதவிக்கரம் நீட்டிய தமிழ்நாடு பத்திரிக்கை புகைப்பட கலைஞர்கள் சங்கம்.!!

சென்னை

மறைந்த பத்திரிக்கையாளர் பெரியவர் சுந்தரமூர்த்தி குடும்பத்திற்கு உதவிக்கரம் நீட்டிய தமிழ்நாடு பத்திரிக்கை புகைப்பட கலைஞர்கள் சங்கம்!

சென்னை
அக்டோபர் 2

மூத்த பத்திரிக்கையாளர் பெரியவர் சுந்தரமூர்த்தி (வயது 89 )சில தினங்களுக்கு முன் மரணமடைந்தார்.

சென்னை, மயிலாப்பூரில் 82 வயதான மனைவி மற்றும் மகள், மருமகன்,
கல்லூரியில் படிக்கும் பேரப்பிள்ளைகளுடன் சிறிய வாடகை வீட்டில் வசித்து வந்த இவர், முதுமையின் காரணமாக கடுமையாக நோயுற்று அவதிப்பட்டு வந்தார்.

பத்திரிகையாளர்கள் அவரை அரசு ராஜீவ்காந்தி பொது மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்ற முயற்சித்தனர். சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார்.

பென்ஷனுக்கான முழுத் தகுதி கொண்டிருந்த‌ அவர் அதற்காக தமிழக அரசிடம் விண்ணப்பித்திருந்தார். அந்த மனு நிலுவையில் இருந்த நிலையில் காலமாகிவிட்டார்.

அவருடைய குடும்ப நிலையை கண்ணுற்ற பத்திரிக்கையாளர் அமைப்புகள் உரிய உதவி வழங்கிட தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளன.

இந்த நிலையில், தமிழ்நாடு பத்திரிகை புகைப்பட கலைஞர்கள் சங்கம் சார்பில் அதன் நிர்வாகிகள் சீனிவாசன், சீனிவாசலு, ஜெரோம் மற்றும் ஸ்டாலின் ஆகியோர் மயிலாப்பூரில் உள்ள பெரியவர் சுந்தரமூர்த்தி குடும்பத்தினரை இன்று சந்தித்து ஆறுதல் கூறி,
நடக்ககூட முடியாமல் வயது முதிர்ந்த நிலையில் உள்ள அவரது மனைவியிடம்
ரூ 3000 வழங்கி ஆறுதல் கூறினர்.

பத்திரிகைத் துறையில் இருந்து திடீரென வந்து ஆறுதலாகப் பேசி உதவி செய்தது அந்த குடும்பத்திற்கு மிகுந்த நம்பிக்கையை அளித்தது.

இந்த குடும்பத்திற்கும் இதுபோல நலிவுற்ற நிலையில் வாடி- வாழும் பத்திரிக்கையாளர்கள் குடும்பத்திற்கும் அரசு உதவி செய்தால் அவர்கள் குடும்பத்திற்கு உதவிகரமாக இருக்கும்.

முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் கண்டிப்பாக செய்வார் என்ற நம்பிக்கை உள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *